எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கொல்கத்தா, மே 20 கர்நாடக சட்ட சபையில் தனக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், பலப் பரிட்சையை சந்திக்காமல் எடியூரப்பா முதல்-வர் பதவியில் இருந்து நேற்று (19.5.2018) ராஜினாமா செய்தார்.

மம்தா பானர்ஜி

இதற்காக மேற்குவங்காள முதல்-வர் மம்தா பானர்ஜி, ஜனதாதளம்(எஸ்) கட்சி யின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவே கவுடாவுக்கு பாராட்டு தெரிவித் துள்ளார். அவர் தனது சமூக ஊடக பதிவில், ஜனநாயகம் வென்றது. கருநாடகாவை வாழ்த்துகிறேன். தேவே கவுடா, குமாரசாமி, காங்கிரசு மற்றும் அனைவருக்கும் பாராட் டுகள். இது பிராந்திய முன்னணிக்கு கிடைத்த வெற்றியாகும் என்று குறிப்பட்டு உள்ளார்.

சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்-வர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா நகரில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, கருநாடகாவில் ஆட்சியை கைப்பற்ற பாரதீய ஜனதா ஜனநாயக நெறிமுறைகளை மீறி செயல்பட்டது. ஆளுநர் பதவி தவறாக பயன்படுத்தப்பட்டது. எடியூரப்பாவின் பதவி விலகல் மூலம் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ஜன நாயகத்தை கேலிக்கூத்தாக்கி விட்டனர். இப் போது இந்தியா மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். அவர் மேலும் கூறுகையில், கருநாட காவிலும், தமிழ்நாட்டிலும் ஆளுநர் பதவி தவறாக பயன்படுத்தப்படுவது வருத்தமாக உள்ளது. தமிழ்நாட்டில் அரசமைப்பு முறையை பாரதீய ஜனதா சீரழித்துவிட்டது. அதே முயற்சியை கருநாடகாவிலும் கையாண்டது. முன்னேற்றம் அடைந்து வரும் மாநிலங்களை மத்திய அரசு பலவீனப்படுத்தி வருகிறது. கருநாடகாவில் பாரதீய ஜனதாவின் திட்டம் நிறைவேறி இருந்தால் அடுத்து ஆந்திராவைத்தான் குறி வைத்திருப்பார்கள் என்றும் சாடினார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிவில், கருநாடகாவில் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பாரதீய ஜனதா தோல்வியைத் தழுவியுள்ளது. குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்றும் அவர்களின் அதிகார வெறி இதில் முழுமையாக வெளிப்பட்டு இருக் கிறது. ஆனால் இதிலிருந்து பாரதீய ஜனதா எந்த பாடத்தையாவது கற்றுக் கொள்ளுமா?... என்று கூறியுள்ளார்.

டி.ராஜா

எடியூரப்பாவின் பதவி விலகல் மதச் சார்பற்ற சக்திகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று இந்திய கம்யூனிஸ்டு செய லாளர் டி.ராஜா டில்லியில் செய்தியாளர்களி டம் தெரிவித்தார்.

அக்கட்சிக்கு இப்போதுதான் சரிவு தொடங்கி இருக்கிறது. ஒருங்கிணைந்து நின் றால் பாரதீய ஜனதாவை வீழ்த்த முடியும் என்பதை மதச்சார்பற்ற சக்திகள் கருநாடக அரசியல் பாடம் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாயாவதி

அரசியலில் பண பலமும், அதிகார பலமும் எப்போதுமே கை கொடுக்காது என உ.பி. முன்னாள் முதல் அமைச்சர் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.

கருநாடக மாநிலத்தில் பா.ஜ.க. அடைந் துள்ள வீழ்ச்சி, அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றி விடலாம என்னும் அக்கட்சியினரின் கனவை நிர்மூலமாக்கி உள்ளது. இதை உச்சநீதிமன்றத்தின் கண் காணிப்பு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.அவர்களால் நியமிக்கப்பட்ட மாநில ஆளு நர்கள் கட்சியின் உத்தரவின்படி நடந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவதைவிட, தங்களது பதவியை விட்டு விலகிச் செல்லலாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner