எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, மே20 கருநாடக சட்டமன்றத்தில் நேற்று (19.5.2018) மாலை 4 மணிக்கு  நம்பிக்கை வாக் கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், சரியாக 4 மணிக்கு தனது பதவியை விட்டு விலகி சபையில் இருந்து வெளியேறினார் எடியூரப்பா.

இது பாரதீய ஜனதா கட்சிக்கு விழுந்த முதல் சம்மட்டி அடி என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நேற்று காலை 11 மணி வரை 100 சதவிகிதம் வெற்றி பெறுவேன் என்று மீண்டும் மீண்டும்  கூறிவந்த  எடியூரப்பா பதவி விலக காரணம் என்ன என்பது குறித்து ஆராய்ந்தால், பாஜவின் அதிகா ரப்போதைதான் என்பது தெரிய வரும்.

இந்த அதிகார போதையின் கார ணமாகவே  குதிரை பேரம் போன்ற சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை களை தைரியமாக மேற்கொண்டனர். ஆனால், கருநாடகாவில் அவர்களது பாச்சா பலிக்கவில்லை. அவர்களின்  ஒவ்வொரு நடவடிக்கையும் காங்கிரசா ரால் கண்காணிக்கப்பட்டு, ஆங்காங்கே 'செக்' வைக்கப்பட்டதால், நேற்று எடி யூரப்பா தனது பதவியை விட்டு விலக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதுவரை பல மாநி லங்களில் சிபிஅய், வரு மான வரித்துறை போன் றவற்றால் மிரட்டி, ஆட்சியை கைப்பற்றி வந்த பாரதீய ஜனதா வுக்கு கருநாடகாவில் விழுந்த அடி அவர்களின் தவறான போக்குக்கு விழுந்த சம்மட்டி அடி.

மாநில ஆளுநர்களின் அத்துமீறலுக்கும் இது ஒரு பாடம். பெரும் பான்மை இல்லாத ஒரு கட்சியை, ஆட்சிப் பொறுப்பேற்க வைத்த வஜுபாய் போன்ற ஆளுநர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டியவர்கள்.

இன்றைய எடியூரப்பாவின் பதவி விலகலுக்கு, கருநாடக காங்கிரசு முன் னாள் அமைச்சர் சிவகுமாரின் செயல் பாடும் ஒரு காரணம். மேலும் காங்கிரசு மூத்த தலைவர்கள் அதிரடியாக சட்டப் போராட்டம் நடத்தியும்,  சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யும்படி உச்சநீதி மன்றத்தில் உத்தரவு பெற்றதோடு நிற்காமல், இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகளை காண நேரடியாக சபை வளாகத்திற்குள் அமர்ந்ததும் மற்றொரு காரணம்.

இதற்கிடையில், பாஜவுக்கு  ஆதரவு தரு வதாக கூறிய 2 எம்எல் ஏக்களும், மறைத்து வைக்கப்பட்டிருந்த  நிலையில், அவர்கள் இருக்கும் இடமானது காங்கிரசு முன்னாள் அமைச்சர் சிவகுமாரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் 2 பேரும்  அவரது பாதுகாப்புடன் சட்டமன்றம் அழைத்து வரப்பட்டனர்.

மேலும், எடியூரப்பா மற்றும் முரளி தரராவ் ஆகியோர் காங்கிரசு எம்எல்ஏ பட்டீலுடன்  பேசிய ஆடியோவை வெளியிட்டு காங்கிரசார் பாஜகவுக்கு மேலும்  கிலியை உண்டு பண்ணினர்.

இதன் காரணமாக மதிய இடை வேளையின்போது, எடியூரப்பா திடீ ரென சபாநாயகரை சந்தித்து தனியாக சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். மேலும்,  பா.ஜ.க, தலைவர் அமித் ஷா மற்றும் பிரகாஷ் ஜவடேகருடன் தொலைபேசியில் ஆலோசனை நடத் தினார்.

இந்நிலையில், சட்டசபை தொடங் கியதும் நம்பிக்கை கோரும் தீர்மா னத்தில் இது தனக்கு அக்னி பரீட்சை என்று கூறிய எடியூரப்பா, இறுதியில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை விட்டு விலகுவதாக கூறிவிட்டு சபையில் இருந்து வெளியேறினார்.

நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதையொட்டி காங்கிரசு மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி, மல்லிகார் ஜுனகார்கே போன்ற தலைவர்கள்  சட்டசபை மாடத்தில் அமர்ந்து கவனித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக காங்கிரசு, ஜேடிஎஸ் நடத்தி வந்த சட்டப் போராட்டம் வெற்றி பெற்றுள் ளது. பாரதீய ஜனதாவின்  அதிகார அத்துமீறலுக்கு முதல் சம்மட்டி அடி கருநாடகாவில் விழுந்துள்ளளது.

இதன் எதிரொலி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்த லில் எதிரொலிக்கும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner