எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சட்னா, மே 21  மத்தியப்பிரதேச மாநிலத்தின் சாட்னா மாவட்டத்தில் பசுவதை செய்ததாகக் கூறி 2 பேர்மீது நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியானார்.மத்திய பிரதேச சாட்னா மாவட்ட, சாட்னா - கட்னி சாலையில் சிறுகுன்று அருகில் ரியாஸ், கார் ஓட்டுநர் ஷாகீல், ஸாகி மற்றும் இஸ்மாயில் ஆகிய 4 பேரை கிராமமக்கள் சிலர் பசுவுடன் பார்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கிராம மக்கள் சிலர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது ஸாகி மற்றும் இஸ்மாயில் தப்பி ஓடிவிட்டனர். பின்னர், ரியாஸ்மற்றும் ஷாகீல் மீது தாக்குதல் நடத்தப்பட் டுள்ளதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து மத்தியப்பிரதேச காவல்துறையினருக்கு வெள்ளிக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவஇடத்துக்கு வந்த காவல்துறையினர் ரியாஸ்மற்றும் ஷாகீல் ஆகியோரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், ரியாஸ் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஷாகீலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில், ஷாகீல் அளித்த புகாரின் அடிப்படையில் பவன் சிங் கோன்ட், விஜய்சிங் கோன்ட், ஃபூல் சிங் கோன்ட் மற்றும் நாராயண் சிங் கோன்ட் ஆகிய 4 பேரை காவல்துறையினர் சனிக்கிழமையன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பவன் சிங் கோன்ட் அளித்த புகாரின் பேரில், தாக்கப்பட்ட இருவர் மீது மத்திய பிரதேச பசுவதை தடுப்புச் சட்டம் மற்றும் கால்நடை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner