எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, மே 21 கருநாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்களிடம் பேரத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

டில்லியில் செய்தியாளர்களை ஞாயிற்றுக் கிழமை சந்தித்த காங்கிரசு செய்தித் தொடர் பாளர் ஜெய்வீர் செர்கில் கூறியதாவது:

தான்ஊழலுக்குஎதிராகப் போராடி வரு வதாகபிரதமர்மோடி மேடைதோறும் முழங்கி வருகிறார். கருநாடகத்தில் அவரது கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், காங்கிரசு மற்றும் மஜத எம்எல்ஏக்களிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசியுள்ளனர். இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த பிரதமர் உத்தரவிட வேண் டும்.

சொந்தக் கட்சியிலேயே ஊழல்வாதிகளை வைத்துக் கொண்டு, நாட்டைத் திருத்துவதாக மோடி பேசி வருவது வேடிக்கையாக உள்ளது. மத்திய ஆட்சியை பாஜகவிடம் இருந்து விடு விக்கும் நோக்கில் காங்கிரசு செயல்பட்டு வருகிறது. தேசிய அளவில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் அரசியலையே பாஜக நடத்தி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வின் பலன் களை மக்களுக்கு அளிக்காமல், அதனை பாஜக அரசு கொள்ளையடித்துள்ளது. அதை வைத்துதான் கருநாடகத்தில் எங்கள் கட்சி எம்எல்ஏக்களை கோடிக்கணக்கில் விலை பேசியுள்ளனர்.ஆட்சிஅதிகாரத்தைக்கைப் பற்றஎதைவேண்டுமானாலும்செய்யலாம் என்பதுதான் பாஜகவின் கொள்கையாக உள்ளது. அரசமைப்புச் சட்டத்தை மீறு வதற்கும், ஜனநாயகத்தை புறம்தள்ளுவதற்கும் பாஜக தயங்குவதே இல்லை. கருநாடக மாநில தேர்தல் மூலம் பாஜக எவ்வளவு மோசமான அரசியலில் ஈடுபடுகிறது என்பது நாட்டு மக்களுக்கு முழுமையாகத் தெரியவந்துள்ளது.

வாராணசியில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து 18 பேர் உயிரிழந்த நிலையில் கூட, அத்தொகுதி எம்.பி.யான மோடி, அங்கு நேரில் சென்று யாருக்கும் ஆறுதல் கூறவில்லை. தேர்தல் ஆதாயத்துக்காக மட்டுமே அத்தொகுதி மக்களை அவர் பயன்படுத்திக் கொண்டார் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner