எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காந்திநகர், மே25 குஜராத் மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது என்று கூறி, அம்மாநில பாஜக அரசே மழைவேண்டி ‘பர்ஜான்ய யக்ஞா’  எனும் பெயரில் யாகத்தை நடத்துகிறதாம்.

குஜராத் மாநிலத்தில் 33 மாவட் டங்களில் 41 இடங்களில் 31.5.2018 அன்று ஒரே நாளில் மழைவேண்டி யாகம் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மழைக்கான கடவுள்கள் இந்திரன், வருணனை மகிழ்வித்து மழை வேண்டி குஜராத் மாநில அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் 41 இடங்களில் யாகங்கள் நடத்தப்படுகிறது.

அமைச்சர் படேல்

குஜராத் மாநிலத்தில் மழையின்றி மிகவும் வறட்சியான சூழலில், மாநில அரசு தண்ணீருக்காக ‘சுஜலம் சுஃபலம் ஜல் அபியான்’ இயக்கத்தை நடத்துகிறது என்று அம்மாநில அமைச்சர் பர்பாத் படேல் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:

“இந்த நேரத்தில் அதிகமாக மழை பெய்யவேண்டும் என்பதற்காக ‘பர் ஜன்யா யக்ஞா’ யாகத்தை நடத்த வேண் டும் என்று முடிவை அரசு எடுத்துள்ளது. அனைத்து பகுதிகளிலும்  யாக தொடக்க நிகழ்வில்  அமைச்சர்கள்  கலந்து கொள் வார்கள். அதன் நோக்கம் ஜல் அபியான் திட்டத்தின்மூலமாக வறண்ட நீர்நிலை களில் நீர் நிரம்பி வழிந்திட வேண்டும் என்பதுதான்’’ என்றார்.

முதல்வர் விஜய் ரூபானி

துவாரகாவில் செய்தியாளர்களை சந்தித்தபோது மாநில முதல்வர் விஜய் ரூபானி கூறியதாவது:

“யாகத்தின் மூலம் மழைக்கான கடவுளிடமிருந்து மழையை வேண்டுவதாகும். இந்த நேரத்தில் ஏராள மான நீர் நிலைகளை ஆழப்படுத்தியிருக் கிறோம். யாகத்தின்மூலமாக தற்பொழுது மழைக்கடவுளிடமிருந்து நீர்நிலைகளை நிரப்பிட வேண்டுகிறோம்’’ என்றார்.

1.5.2018 அன்று ஜல் அபியான் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்மூலம் 13ஆயிரம் ஏரிகள், குளங்கள் மற்றும் 32 ஆற்றுப்பகுதிகளில் தூர்வாரப்பட்டது.

குஜராத் மாநில தலைமைநிலைய செயலாளர் ஜே.என்.சிங் கூறுகையில், குஜராத்தில் மழைநீர் பாதுகாப்பது தொடர்பான பணிகள்  80 விழுக்காடு நிறைவு பெற்றுள்ளன என்றார்.

குஜராத் மாநிலம் உருவான நாளான மே முதல் நாளன்று மாநிலத்தில் தண்ணீர் பாதுகாப்பு பணிகளை குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி தொடங் கினார். அப்பணிகளில் 2800 பணியாள்கள் பணிபுரிந்தார்கள்.  தொண்டு நிறுவ னங்கள், மத நிறுவனங்கள் 450 பணி யாற்றின. இந்தியாவிலேயே மிகப்பெரிய தண்ணீர் பாதுகாப்புக்கான பணிகள் நடைபெற்றுள்ளது குஜராத்தில்தான்.

தற்பொழுது 2800 தொண்டு நிறு வனங்கள், 3.25 லட்சம் பணியாள்கள் இந்த இயக்கத்தில் இணைந்து குஜராத் மாநிலத்தை வறட்சியற்ற மாநிலமாக மாற்ற பணிபுரிந்துள்ளார்கள்.

11ஆயிரம் கன அடி நிலப்பகுதியில் 13ஆயிரம் கிராமங்களில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் 32 ஆற்றுப் பகுதிகள் ஆகியவற்றில் ஒரே மாதத்தில் பணியாற்றி குடிநீர் பற்றாக்குறை ஏற் படாத வண்ணம் நிரந்தரமாக தீர்வு எட்டப்பட்டுள்ளது என்று அரசுத் தரப் பில் கூறப்பட்டுள்ளது.

அத்திட்டத்தின் நிறைவு நாளில் பர்ஜன்யா யாகங்கள் நடைபெறுகிறது.

குஜராத்தில் உள்ள முக்கியமான 204 அணைகளில் 30 விழுக்காட்டுக்கும் கீழ் தண்ணீர் சென்றுவிட்டன. சர்தார் சரோவர் அணையில் தண்ணீர் கொள் ளளவு 25,227 மில்லியன் கன அளவில் 30 விழுக்காட்டளவில் மட்டுமே தற்பொழுது தண்ணீர் இருப்பு உள்ளது. பருவமழை காலம் தாழ்ந்து பெய்தால், கோடை வறட்சியால் மாநிலம் பெரிதும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

முதல்வர், துணை முதல்வர் உள் ளிட்ட அமைச்சர்கள் யாகங்கள் நடக்கும் இடங்களில் கலந்து கொள்வார்கள். யாகம் நடக்கும் இடங்களில் பொதுக் கூட்டங்களும் நடைபெறும். அப்போது அமைச்சர்கள் பங்கேற்று அரசின் சாத னைகளை எடுத்துக்கூறுவார்கள். யாகத் துக்குப்பிறகு பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்படும் என்றார் முதல்வர் ரூபானி.

காங்கிரசு கண்டனம்

பாஜக அரசு தன்னுடைய தவறான நிர்வாகத்தை மூடி மறைப்பதற்காக செய்கின்ற மத சடங்குகளை செய்வதை கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி யான காங்கிரசு கட்சி கூறுகிறது.

காங்கிரசு கட்சியின் செய்தி தொடர் பாளர் மனீஷ் தோஷி கூறியதாவது: “பாஜக அரசின் தவறான நிர்வாகத்தின் காரணமாக மாநிலத்தில் தண்ணீர் பற் றாக்குறை எற்பட்டுள்ளது. ஜல் அபியான் திட்டம், இதுபோன்ற யாகங்களை நடத்துவது ஆகியவற்றின் மூலமாக தண்ணீரை பாதுகாக்காத அரசின் தோல் விகளை மறைப்பதற்காக மக்களை திசை திருப்புவதை நோக்கமாகக் கொண் டுள்ளது’’ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner