எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு

தூத்துக்குடி, மே 25 ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து போராடியதன் விளைவாக ஆலை மூடப்படும் செய்தியை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு முடிவு செய்துள்ளது. அமைதி திரும்ப மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று தெரிவித்தார்.

மின் இணைப்பு துண்டிப்பு

தூத்துக்குடியில் 3- ஆவது நாளாக நேற்றும் பதற்றம் நீடித்தது. தீ வைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் தொடர்ந்தன. நீதிமன்ற உத்தரவால் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 100- ஆவது நாளை எட்டி யதை தொடர்ந்து கடந்த 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் கலவரம் வெடித் தது. கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக வளா கத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 95 பேர் தூத் துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடியில் கடைகள், வணிக நிறுவனங்கள் 3-ஆவது நாளாக நேற்றும் அடைக்கப்பட்டிருந்தன. காமராஜ் காய் கறி மார்க்கெட் நேற்று காலை 5 மணி முதல் 9 மணி வரை திறக்கப்பட்டது. அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தி யாவசிய பொருட்களை வாங்க கூட் டம் அலைமோதியது. கடைகள் வணிக நிறுவனங்கள் தொடர்ந்து அடைக் கப்பட்டன.

5 ஆயிரம் காவல்துறையினர்

தூத்துக்குடியில் ஏற்கெனவே ஏடி ஜிபி விஜயகுமார் தலைமையில் 5 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த ஆயிரம் காவல்துறையினர் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தூத்துக்குடியில் நேற்று மாலை ஆட்சியர் அலுவலகத் தில், வணிகர்கள், ஓட்டல் உரிமையா ளர்கள்சங்கத்தினர்,அரசியல்கட்சி யி னர் பங்கேற்ற அமைதிக் கூட்டம் நடைபெற்றது.இதன்பிறகு,மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர் களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வர் ஏற்கெனவே தெரி வித்தபடி, ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண் டிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையில்லாத திட்டம் வேண்டாம் என்பதுதான் அரசின் நிலைப் பாடு. நீதிமன்றத்திலும் அரசு தரப்பில், இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலையை நடத்த அரசு விரும்பவில்லை. வழக்கு நிலுவையில் இருக்கிறது.அதில்ஆலைக்குஎதிரா கவே அரசு வாதிட்டு வருகிறது. ஆலையைத் திறப்பதற்கு இனி வாய்ப் பில்லை. மக்கள் கோரிக்கை நிவர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. இதை மக்கள் புரிந்துகொண்டு அமைதி திரும்ப ஒத் துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner