எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தூர், மே 26 தந்தை பெரியார் ஆற்றிய அரும்பெரும்பணிகள், அதனால் சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், விளைவுகள்குறித்து தமிழ்நாட்டைக் கடந்து பன்னாட்டளவில் பலரும் தெரிந்து கொண்டுள்ளனர். இளைய தலைமுறையினர் உயர்கல்வி பயின்று பன்னாட்டு நிறுவனங்களில் பணிவாய்ப்புகள் பெற்று செல்லுகையில், தமிழகத்துக்கே தொடர்பில்லாத மற்றவர்கள் மூலமாக தந்தை பெரியார் பணிகளை  அறிந்து அவர்தம் தொண்டுகளின் பலன்களை உணர்ந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டிலிருந்து வடநாட்டுக்கு பணியின் காரணமாக சென்றவருக்கு ஏற்பட்ட அனுபவத்தில் தந்தை பெரியாரை, தந்தை பெரியார் ஆற்றிய பணியின் விளைவுகளை உணர்ந்து கொண்டுள்ளதாக இணையத்தில் பார்த்திபன் இலட்சுமணசாமி என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர், ‘‘தற்சமயம் நான் இந்தூரில் இருக்கிறேன். நான் தங்குவதற்காக சென்ற விடுதியின் வரவேற்பாளர் என்னுடைய குடும்பப் பெயரைக் கேட்டார். எனக்கு குடும்பப் பெயர் என்று ஏதும் கிடையாது என்றேன். அப்போது எதிர்பாராமல்  அங்கே வந்த அவ்விடுதியின் மேலாளர் கூறினார், தமிழர்கள் மற்றும் பெரியார் வழிவந்தவர்கள்குறித்து விளக்கினார். அவர் கூற்றின்மூலமாக, தந்தைபெரியார் ஆற்றிய அரும்பணிகளை நான் உணர்ந்துகொள்ள முடிந்தது. அந்த தலைவருக்கு என்னுடைய வணக்கம்’’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner