எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மே 27 இந்தியாவின் தலைநகரான டில்லியில் இந்த ஆண்டின் முதல் மூன்றரை மாதங்களில் நாளொன்றுக்கு அய்ந்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள் ளாகுகின்றனர் என டில்லி காவல்துறை வெளியிட்ட அறிக்கையிலுள்ள தக வல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து டில்லி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டில் 96.63 சதவிகித பாலியல் வன்முறை வழக்குகளில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் அனைவரும் பாதிக்கப் பட்டவருக்கு நன்கு அறிந்தவர்கள் ஆவர். இந்தாண்டின்,ஏப்ரல் மாதத்தில் 578 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டில் 563 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2017ஆம் ஆண்டின் ஏப்ரல் 15ஆம் தேதி வரை பெண்கள் மீதான 944 தாக்குதல்கள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 883 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2017ஆம் ஆண்டில் 2,049 பாலியல் வன்முறை வழக்குகளும், 2016ஆம் ஆண்டில் 2,064 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு தரவுகளின்படி, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டில்லி ஆகிய மாநிலங்களில் தான், பதினெட்டு வயதுக்குக் குறைவான பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாயினர். டில்லியில் நாளொன்றுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாயினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner