எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் மேனாள்  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

நாகபுரிமே28ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் மேனாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்க உள்ளார்.

இந்திராகாந்திகாலத்திலி ருந்துகாங்கிரசுகட்சியிலி ருந்துவரும்மூத்ததலை வரானபிரணாப்,ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது அரசி யல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் நாகபுரியில் நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு நிகழ்ச்சி ஜூன் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார். இதனை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை பிரணாப் முகர்ஜியின் அலுவலகமும் உறுதி செய்துள்ளது. ஜுன் 7,8-ஆம் தேதிகளில் பிரணாப் முகர்ஜி நாகபுரியில் இருப்பார். பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக இருந்தபோது நமது நாட்டின் கலாச்சாரம், தத்துவப் பெருமைகள் குறித்துப் பேச ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு ஒரு சில முறை அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் அதில் பங்கேற்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner