எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மோடி  அரசின் பொருளாதார மோசடி!''

புதுடில்லி மே 28  மோடி அரசு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து இம்மாதம் வரை தொடர்ந்து வங்கி மற்றும் நிதித்துறை தொடர்பான மோசடிகள் அதி கரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் வெளி யிட்டுள்ளது.

புகழ்பெற்றதொழிலதிபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட பலர் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளனர். மேலும் பல தனியார் பெருநிறுவனங்கள் தொடர்ந்து பங்குவர்த்தகம் மற்றும் நிதித்துறையில் அதிக அளவு மோசடிகள் செய்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த மோசடிகள் தொடர்ந்து ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதன் மூலம் இந்திய அரசுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் பொருளாதார நிபுணர்களால் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் இது குறித்த உண்மை நிலவரத்தை அறிய சமூக ஆர்வலரும், பொருளாதார நிபுணருமான பிரசஞ்சித் போஸ் பொருளாதார மோசடிகள் குறித்த விவரங்கள் குறித்து ரிசர்வ் வங் கிக்குத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களைக் கேட்டிருந்தார்.

அதற்கு ரிசர்வ் வங்கி, மோடி அரசு பங்கேற்ற கடந்த 4 ஆண்டுகளில் இதற்கு முந்தைய அய்ந்து ஆண்டுகளைவிட ரூ.55,000 கோடி வங்கி மோசடி அதிகரித் துள்ளது.  இது முந்தைய அரசைவிட மூன்று முதல் அய்ந்து மடங்கு ஆகும்;  அப்போதிருந்த மன்மோகன் சிங் அரசை விட தற்போதைய காலத்தில் மோசடி  செய்வோர் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது எனப் பதில் அளித்துள்ளது.

இது குறித்து பிரசன்ஜித் போஸ், அரசின் விசாரணைத் துறைகள் என்ன செய்கின்றன?  இதுவரை எத்தனை மோசடிக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்?  அவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது? பொதுத்துறை வங்கிகளில் இவ்வளவு தொகை மோசடி செய்யப்பட்ட தற்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் பொறுப்பேற்று பதில் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இப்புகார்கள் தொடர்பில் காங்கிரசு கட்சி மோடி அரசின் மீது புகார் கூறியுள்ளது, மேற்கொண்டு பண மோசடிக்காரர்கள் மீது இன்னும் எத்தனை நாள் கருணை காட்டப்போகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner