எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தூத்துக்குடி, மே 29 தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக் காலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட் டுள்ளது. இதையடுத்து ஆட்சியர் முன்னி லையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

மக்களின் உணர்வுகளுக்கும் கருத்து களுக்கும் மதிப்பளித்து இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல் வர் கே.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர் லைட் ஆலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் கடந்த பிப்ரவரி யில் இருந்து தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். பேராட்டத்தின் 100-வது நாளான கடந்த 22ஆ-ம் தேதி, ஆட்சியர் அலு வலகத்தை முற் றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறி ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது கல் வீச்சு, தடியடி சம்பவங்களால் போராட்டம் கலவரமாக மாறியது. கலவரத்தை அடக்க காவல் துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரி ழந்தனர். நூற்றுக்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்தன.

இந்நிலையில், நேற்று (28.5.2018) தூத்துக்குடிக்கு சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துப்பாக் கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் சென்னை திரும் பிய அவருடன் முதல்வர், அமைச்சர்கள், உயர் அதி காரிகள் ஆலோசனை நடத் தினர். போராட்டக் குழுவினரும் முதல் வரை சந்தித்து மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் சுற்றுச்சூழல், வனத் துறை செயலாளர் எம்.டி.நசீமுதீன் நேற்று  (28.5.2018) வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர் லைட் தாமிர உருக்காலை தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதியை புதுப் பிக்க மறுத்து கடந்த 9-.4.-2018-ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட் டுள்ளது. அதைத் தொடர்ந்து ஸ்டெர் லைட் ஆலையை மூடவும், மின்சார இணைப்பை துண்டிக்கவும் 23.-5.-2018-ல் மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டது. அதன் படி ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 48-ஏ பிரிவின்படி காடுகள், வன உயிரினங் களைக் காக்க சுற்றுச்சூழலைப் பாது காத்து, மேம்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் கடமையாகும். 1974-ஆம் ஆண்டு தண்ணீர் சட்டத்தின்படி தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஸ்டெர் லைட் தாமிர உருக்காலைக்கு சீல் வைத்து நிரந்தரமாக மூட வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

ஆலைக்கு சீல்வைப்பு

தமிழக அரசு அரசாணை வெளியிட்டதைத் தெடர்ந்து, தூத்துக்குடி ஆட் சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்றனர். ஆட்சியர் முன்னிலையில் ஆலையைப் பூட்டி சீல் வைத்தனர். ஆலையை நிரந் தரமாக மூடுவதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளையும் பிரதான வாயிலில் ஒட்டினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner