எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 29 தமிழக சட்ட சபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக் கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று  (29.5.2018) மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு அவை கூடி யதும், முன்னாள் சட்டமன்ற உறுப் பினர்கள் செ.மாதவன், கே.கே.ஜி. முத்தையா, சா.கணேசன், பி.அப்ப வு, ஆர்.சாமி, ஜெ.குரு என்கிற குரு நாதன், பூபதி மாரியப்பன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது. அனைவரும் இரண்டு மணித் துளிகள் எழுந்து நின்று அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.

அதன்பின்னர் கேள்வி நேரம் தொடங் கியது. உறுப்பினர்களின் கேள்வி களுக்கு பதில் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே தூத்துக்குடி துப் பாக்கிச்சூடு தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக் கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை விதி 56-ன் படி ஸ்டெர்லைட் விவகாரம், துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை பற்றி நாள் முழுவதும் விவாதிக்க ஒத்தி வைப்பு தீர்மானம் கோரி தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நோட்டீஸ் கொடுத்தார். இன்று சட்டமன்றத்திற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து வந்தனர். ஸ்டெர்லைட் விவகாரம் மற்றும் அது தொடர்பான போராட்டத் தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட பிரச்சினைகளால் தமி ழக சட்டப்பேரவையில் இன்று அமளி ஏற்படலாம் என்பதால், தலைமை செய லகத்தில் பலத்த காவல்துறையினரின்  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner