எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாட்டின் குடியரசுத் தலைவரையே கோவிலுக்குள் நுழைய அனுமதிக்காத அர்த்தமுள்ள இந்து மதம்!

தீண்டாமை ஒழிப்புச் சட்டம் குறட்டை விடுகிறதா?

அஜ்மீர், மே 31 ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரிலுள்ள பிரம்மா கோவிலின் உள்ளே குடியரசுத் தலைவரை  நுழையவிடாத காரணத்தால் அவர் கோவி லுக்கு வெளியே உள்ள படியில் அமர்ந்து குடும் பத்துடன் வழிபாடு செய்தார்.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தி னருடன் ராஜஸ்தான் மாநி லத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளார். அப்போது அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள புஷ்கர் என்ற இடத்திலுள்ள பிரம்மா கோவிலுக்கு வழிபடச் சென்றார். அப்போது கோவில் பூசாரிகள் அவரை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை, ஆகையால் அவர் கோவிலுக்கு வெளியில் உள்ள படியில் அமர்ந்து வழிபாடு செய்தார். இந்த விவகாரம் சமூக வலை தளங்களில் பரவியது. இதை பல சமூக ஆர்வலர்கள் கண்டித்தனர்.

குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் சமாளிப்பு

இந்தநிலையில்குடியரசுத்தலைவர் அலுவலகம்வெளியிட்டுள்ளஅறிக் கையில் குடி யரசுத்தலைவரின் மனைவிக்கு மூட்டுவலிபாதிப்பு இருக்கிற காரணத்தால் கோவி லுக்கு உள்ளே நுழைய முடிய வில்லை, ஆகவே அவரும் குடியரசுத்தலைவரும் அவரது மகளும் கோவில் முகப்பில் அமர்ந்து வழிபாடு செய்தனர் என்று விளக்க அறிக்கை வெளியிட்டிருந்தது,

உண்மைக் காரணம் என்ன?

இது தொடர்பாக அஜ்மீர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் படம் ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில் சுமார் 50--க்கும் மேற்பட்ட படிகளைக் கொண்டகோவிலில்எல்லா படிகளையும் கடந்துகோவில் கருவறை வரை சென்ற குடியரசுத் தலைவரின் மனைவிக்கு மூட்டு வலிகாரணம் என்று சொல்வது மிகவும் அபத்தமானதாகும், இந்தியாவில் இன்றளவும் குடியரசுத்தலைவர் என்றாலும் அவர் தாழ்த்தப்பட்டவர் என்றால் தீண்டத் தகாதவர்களுக்கான மனுநீதி சட்டமே அவர் களுக்கும் உண்டு என்று கூறியிருந்தார்.

இந்தக் கோவிலில் தொடர்ந்து இதே நிலைதான்!

மேலும் இக்கோவிலில் பல ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட வில்லை. இது தொடர்பாக பலமுறை சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர்அரசி டமும் கோவில் நிர்வாகத்தினரிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2012- ஆம் ஆண்டு இக் கோவிலுக்கு அருகில் உள்ள மற்றொரு கோவிலில் பள்ளி செல்லும் தலித் மாண வர்கள் கோவிலுக்கு வழிபடச் சென்றதை தடுத்து அவர்களை விரட்டிய நிகழ்வு பெரும் விவாதத்திற்குள்ளானது.  இந்த நிலையில் குடியரசுத் தலைவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அதை மறைக்கும் விதமாக குடியரசுத்தலைவர்அலுவல கமேவிளக்கம்அளித்துஅந்த நிகழ்வின் உண்மைத்தன்மையை மறைத்துள்ளது.

அர்ச்சகப் பார்ப்பானுக்கு அடி உதை!

இந்நிலையில் குடியரசுத் தலைவரை வாசலில் நிறுத்தி படியில் அமர்ந்து பூஜைகள் செய்ய வலியுறுத்திய கோவில் பார்ப்பன அர்ச்சகர், கோவிலுக்கு வந்த ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்டார். இத்தாக்குதல் தொடர்பாக அஜ்மீர் காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டனர். அப்போது அசோக் மேல்வால் என்பவரை பிடித்துவிசாரித்தபோதுஅவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். கோவில் ஒன்றில் குடியரசுத்தலைவருக்கே வழி பட அனுமதியில்லை என்ற போது சாமானியர்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கோபத்தில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து அக்கோவிலுக்குச் சென்றார். பக்தர்களைப் போல் அவரும் கோவில் வரிசையில் நின்றுகொண்டிருந்தார் அப்போது குடியரசுத்தலைவரை படியில் அமரவைத்து வழிபாடு செய்ய வைத்த கோவில் அர்ச்சகர் அங்கு வந்தார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியால் அப் பார்ப்பனரை சராமரியாகத் தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். கோவிலின் கண்காணிப்புக் காமிராவில் உள்ள பதிவை வைத்து கோவிலுக்கு வெளியே நடமாடிக் கொண்டிருந்த அசோக்கை கைது செய்தோம் என்று காவல் துறையினர் கூறினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner