எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஒரே ஆண்டில் 478 சதவிகிதம் கூடுதலாகப் பெற்றது பி.ஜே.பி. ஆதாரங்கள் இல்லாது குவிந்த தொகையோ ரூ.464.84 கோடி

புதுடில்லி, ஜூன் 1 கார்ப்பரேட் நிறு வனங்களிடமிருந்து நன்கொடையாக அரசியல் கட்சிகள் கோடிக் கணக்கில் ரூபாய்களை அள்ளிக் குவித்துள்ளன. இந்தப் பட்டியலில் மற்ற கட்சிகள் எட்ட முடியாத அளவிற்கு பி.ஜே.பி. பெற்றுள்ளது. ஒரே ஆண்டில் மட்டும் 478 சதவிகிதம் அதிகமாம்.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் 2016--2017 நிதி ஆண்டில் 20,000 ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை பெற்ற தேசிய அரசியல் கட்சிகள் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளது.

அதில் 1,194 நன்கொடைகளை பாஜக பெற்றுள்ளது. அவற்றின் மதிப்பு 532.27 கோடி ரூபாய் ஆகும்.  பாஜகவிற்கு அடுத்தபடியாகக் காங்கிரசு கட்சி 599 நன்கொடைகள்மூலம் ரூ.41.90 கோடி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையத்தில் தேசிய கட்சிகள் அளித்த வரவு -- -செலவு கணக்கு அடிப் படையில் அசோசியேசன் ஆப் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் அறிக்கை யைத் தயாரித்துள்ளது.

2016 -- -2017 நிதி ஆண்டில் ரூ. 20,000 ரூபாய்க்கும் அதிகமாக 2123  தேசிய கட்சிகள் நன்கொடைகளைப் பெற்றதாகவும், அவற்றின் மதிப்பு 589.38 கோடி ரூபாய் என்றும் தெரி வித்துள்ளனர்.

ஒரே ஆண்டில் 478 சதவிகிதம்

அதிகம் பெற்ற பி.ஜே.பி.

பாஜக மட்டும் 1,194 நன்கொடை கள் மூலம் 532.27 கோடி ரூபாயினைப் பெற்றுள்ளது. காங்கிரசு 599 நன் கொடைகள்மூலம் 41.90 கோடி ரூபாய் பெற்றுள்ளது. காங்கிரசு, என்சிபி, சிபிஅய், சிபிஎம் மற்றும் ஏஅய்டிசி கட்சிகள் பெற்ற நன்கொடைகளை விடக் கூடுதலாகப் பாஜக பெற்றுள் ளது. 2015---2016 மற்றும் 2016---2017 நிதி ஆண்டுகள் ஒப்பீட்டின்படி 2015---2016 நிதி ஆண்டில் தேசிய கட்சிகள் 102.02 கோடி ரூபாயினை நிதியாகப் பெற்று இருந்தனர். இதுவே 2016---2017 நிதி ஆண்டில் 478 சதவீதம் உயர்ந்து கூடுத லாக 487.36 கோடி ரூபாயினை நன் கொடையாகப் பெற்றுள்ளனர். பாஜக பெற்ற நன்கொடை - ஒப்பீடு 2015---2016 நிதி ஆண்டில் பாஜக 76.85 கோடி ரூபாய் நன்கொடை பெற்ற நிலையில் 2016---2017 நிதி ஆண்டில் 593 சதவீதம் அதிகம் ஆகும். காங்கிரசு மற்றும் பிற கட்சிகள் தேசிய காங்கிரசு கட்சி 2015---2016 நிதி ஆண்டில் 71 லட்சம் ரூபாய் நிதியாகப் பெற்ற நிலையில், 2016---2017 நிதி ஆண்டில் 6.34 கோடி ரூபாயினை நிதியாகப் பெற்றுள்ளன.

அனைத்து இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சி நன்கொடை 231 சத வீதமும், சிபிஎம் 190 சதவீதமும், இந்திய தேசிய காங்கிரசு காட்சி 105 சதவீதமும் கூடுதலாக நன்கொடையைப் பெற்றுள்ளன. அதே நேரம் சிபிஅய் கட்சியின் நன்கொடை 9 சதவீதம் வரை சரிந்துள்ளது.

2016---2017 நிதி ஆண்டில் தேசிய கட்சிகளின்மொத்தவருவாய்1,559.17 கோடி ரூபாய் ஆகும். தேசிய கட்சிகள் அறியப்பட்ட நன்கொடையா ளர்களிடம் இருந்து 2016---2017 நிதி ஆண்டில் 589.38 கோடி ரூபாய் வரு வாயினைப் பெற்றுள்ளனர். பிற வழிகள் சொத்துக்களை விற்றது, உறுப்பினர் கட்டணம், வங்கி டெபாசிட் விகித லாபம் மற்றும் பத்திரிகைகள் விற் பனை போன்றவை மூலம் தேசிய கட்சிகள் 258.99 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளனர்.

ஆதாரமின்றி பி.ஜே.பி.

அள்ளிக் குவித்த தொகையோ ரூ.464.84 கோடி

2016---2017 நிதி ஆண்டில் தேசிய கட்சிகள் ஆதாரங்கள் இல்லாமல் மட்டும் 710.80 கோடி ரூபாய் வரு வாய்ப் பெற்றுள்ளதாக வருமான வரி தாக்கலின் போது குறிப்பிட்டுள்ள. இதில் பாஜக மட்டும் 464.84 கோடி ரூபாய் ஆதாரங்கள் இல்லா வருவாய் ஆகப் பெற்றுள்ளது. தேசிய காங்கிரசு கட்சி கூப்பன்கள் விற்றதன் மூலம் 115.64 கோடி ரூபாய் வருவாய்ப் பெற் றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.   மாநில வாரியான நன்கொடை விவரங்கள் டில்லியில் இருந்து மட்டும் தேசிய கட்சிகள் 290 கோடி ரூபாய் நிதியும், மகாராஷ்டிராவில் இருந்து 112.31 கோடி ரூபாயும், உத்தரப்பிரதேசத்தில் இருந்து 20.22 கோடி ரூபாயும் தேசிய கட்சிகள் நிதிகளைப் பெற்றுள்ளன.

கார்ப்பரேட்களும், வணிகர்களும் 708 நன்கொடைகளை தேசிய கட்சி களுக்கு அளித்துள்ளனர். அவற்றின் மதிப்பு 563.24 கோடி ரூபாய் ஆகும். கார்ப்பரேட்கள்/வணிகர்களிடம் இருந்து பாஜக 515.43 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது. காங்கிரசு 36.06 கோடி ரூபாய் பெற் றுள்ளது. அதே 2016---2017 நிதி ஆண்டில் 1354 தனிநபர்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்துள்ளதாகவும் அதன் மதிப்பு 16.82 கோடி ரூபாய் என்றும் குறிப்பிட்டுள்ளனர். தனிநபர்களிடம் இருந்து பாஜக 16.82 கோடி ரூபாயும், காங்கிரசு 5.84 கோடி ரூபாயும் நன் கொடை பெற்றுள்ளன. அதிகம் நன் கொடை அளித்த நிறுவனங்கள் சத்யா எலெக்ட்ரோல் டிரஸ்ட் பாஜகவு-க்கு 251.22 கோடி ரூபாயும், காங்கிரசுக்கு13.90 கோடி ரூபாயும் நன் கொடையாக வழங்கியுள்ளது. பிஜி ஷிர்கே கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜி நிறுவனம் காங்கிரசு கட்சிக்கு 2 கோடி ரூபாய் நிதியும், ஏ.என்.எண் டெர்பிரைசஸ் இன்ஃப்ரா சர்வீசஸ் 1.10 கோடி ரூபாயும் நிதி அளித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner