எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீண்ட கால போராட்டத்துக்குப்பின் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது

இதில் யாருக்கு வெற்றி என்பது முக்கியமல்ல

நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு காவிரி மேலாண்மை ஆணையம்' (நாம் கேட்டது வாரியம்' என்றாலும்) அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக வெற்றி என்றாலும், காவிரி நீர் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கப்பெற்று, தமிழ்நாட்டின் விவசாயம் பாதுகாக்கப்பட உத்தரவாதம் தேவை என்பதுதான் முக்கியம் - அதற்கு வழி ஏற்பட்டாக வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

உச்சநீதிமன்ற தீர்ப்பு - உத்தரவின்படி, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய அரசு, அரசிதழில் (கெசட்) வெளியிட உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணிகளை தாமதிக்காமல் உடனடியாக இந்த பருவத்திற் குள் தொடங்க வேண்டிய நிலை - கட்டாயம்  ஏற்பட்டுள் ளது.

நடுவர் மன்ற ஆணையும்

உச்சநீதிமன்றத் தீர்ப்பும்

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை விசாரித்த நடுவர் மன்றம் - காவிரி டிரிபியூனல் - 2007இல் இறுதி உத்தரவு பிறப்பித்தது. (அது தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டுமென ஆணையிட்டு வழங்கிய தீர்ப்பினை, செயல்படுத்த வற்புறுத்தி உச்சநீதிமன்றத்தில் போடப் பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு வரவேண்டிய நீர்ப் பங்கீட்டை 192 டி.எம்.சியிலிருந்து 177.25 ஆகக் குறைத்தது (16.2.2018).

இதையாவது, இனி ஒழுங்காகக் கிடைக்கச் செய்ய நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, அப்படியே ஆணையம் - காவிரி மேலாண்மை ஆணையம் - அமைத்திருந்தால் அணைகள் எல்லாம் இந்த ஆணையத்தின் கட்டுப் பாட்டின் கீழ் வந்திருக்கும், வறட்சி - சோதனை காலங் களில்கூட, உரிய பங்கீட்டை, தனது மேற்பார்வையில் உள்ள காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (கமிஷன்) தரும் தகவல்கள் அடிப்படையில் கிடைக்க - முழு சுதந்திரத்துடன் மத்திய - மாநில அரசுகள் தலையீடு ஏதும் குறுக்கீடின்றி இயங்கும் நிலையும் ஏற்பட்டிருக்கும்.

மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அரசு அந்தத் திட்டத்தை' (Scheme) மாற்றியுள்ளது. நடுவர் மன்றம் குறிப்பிட்டதை அப் படியே பின்பற்றாமல், தலைவராக மூத்த ஒரு பொறி யாளர் அல்லது மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரி நிய மிக்கப்படுவார் - மறைமுகமாக மத்திய அரசு ஆதிக் கத்தில் இருக்கும்படி செய்துள்ளதோடு, அணைகளை அந்தந்த மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றுகூறி முக்கிய தன்னாட்சி (Autonomy) சுதந்திரத்தை - ஆணையத்திற்குத் தராமல் பறித்து கருநாடகத்திற்குச் சாதகமாக அது மாற்றப்பட்டு விட்டது.

ஏற்கெனவே வாரியம் அமைக்கும் தீர்ப்பை மாற்றி வியாக்யானம் செய்த மத்திய நீர்வளத்துறை அதிகாரியை தற்காலிகத் தலைவராக நியமனம் செய்துள்ளது மத்திய அரசு.

(இது "தற்காலிகம்'' என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டும்).

யாருக்கு வெற்றி என்பதா முக்கியம்?

இந்த அளவில் வெற்றி பெற்றதானது தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு (பா.ஜ.க. தவிர) போராடியதற்கு மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்லவேண்டும்.

தனித்தனிக் கட்சிகள் - தமிழக ஆட்சியாளர்கள் தங்களால் கிடைத்தது இவ்வெற்றி என்று மார்தட்டினால் யதார்த்தம் தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள 9 கட்சிகளின், விவசாய அமைப்புகளின் தொடர் பிரச்சாரம் போராட் டம் காரணமாகவே கிடைத்த வெற்றி. யாரால் கிடைத்தது என்பதைவிட விவசாயிகளின் வாழ்வாதாரம் எந்த அளவிற்குப் பாதுகாப்பு என்பதே முக்கியம். நீர் வரத்து ஒழுங்குற கிடைத்து பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி, குறுவை போன்ற பருவப் பயிர் விவசாயம் குந்தகம் இல்லாமல் நடைபெற வழி ஏற்பட வேண்டும். தொடர்ந்து நடைபெற வேண்டும். இது நமது அடிப்படை உரிமையாகும்!

இந்த அமைப்பின் - ஆணையத்தின் - செயல்பாட்டி னைப் பொறுத்தே நமது தற்காலிக மகிழ்ச்சி - நீடித்த நிலைத்த மகிழ்ச்சியாக மாற முடியும்.

ஜூன் 12இல் தண்ணீர் திறக்கப்படட்டும்

ஜூன் 12இல் மேட்டூர் தண்ணீர் திறந்துவிட கருநாடகம் குறுக்குசால் ஓட்டாமல், ஒத்துழைக்குமாறு செய்யப்பட வேண்டும்.

உணவின் சமையலின் தரம் - ருசி - உண்ணுவோரின் பயனைப் பொறுத்ததேயாகும்'' என்பது ஆங்கிலப் பழமொழி.

“Proof of the Pudding is eating” - உண்ணுவோர் சுவையுள்ளது என்று கூறினால்தான் அது சரியான சமையலாகக் கருதப்படும்.

அதுபோல இவ்வளவு காலம் உரிமை பறிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட தமிழ்நாடு - விவசாயிகளின் வாழ்வா தாரத்தில் இனியாவது ஒரு விடியல் இதன்மூலம் கிடைக் காதா என்பதே நமது ஏக்கம் - கவலை ஆதங்கம்! எல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

2.6.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner