எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரும்பாலான ஆசிய நாடுகளில் பெட்ரோல் விலை குறைந்திருக்க, இந்தியாவில் மட்டும் ஏன் நாளும் ஏறி வரு கிறது?

- வீரப்பமொய்லி,

காங்கிரசு மூத்த தலைவர்

சரியானதுதானா?

மேனாள் குடியரசுத் தலை வராக இருந்த பிரணாப் முகர்ஜி, காந்தியாரைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்பது சரியானதுதானா?

- காங்கிரசு தலைவர்கள்

தேவைதானா?

மணமகனின் தகுதிக்கு ஏற்ப வரதட்சணை எவ்வளவு வாங்குவது என்பதைக் கணிக் கும் கால்குலேட்டர் என்ற இணைய தளம் நாட்டுக்குத் தேவைதானா?

- மேனகா காந்தி,

மத்திய அமைச்சர்

எங்கே அந்த நாரதர்?

புராண கால கூகுள்தான் இந்து மதக் கடவுளரான நார தர் என்கிறார் உ.பி. துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா.

அந்த நாரதரை இப் பொழுது வரவழைப்பதுதானே!

தடை வருமா?

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. நீட்' தேர்வுக்குப் பயிற்சி அளிக்கப்படும்என்றுகூறி, தொடக்கத்திலேயேலட்சக் கணக்கில் பணம் சுரண்டப்படு கிறது. இதற்குத் தடை வருமா?

- கனிமொழி எம்.பி.,

தி.மு.க. மகளிரணி செயலாளர்

மதிப்பெண் குறைந்தது ஏன்?

+1 பொதுத் தேர்வில் மதிப் பெண்கள் குறைந்தது ஏன்? 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு மூன்றாண்டுகள் தொடர்ந்து அரசு தேர்வு நடத்துவது தேவைதானா?

- பெற்றோர்கள் எழுப்பும் கேள்வி

எப்போது கைது?

தி.மு.க. தலைவர் கலைஞர், அவர் மகள் கனிமொழிபற்றி அவதூறாகக் கருத்துத் தெரி வித்த எச்.ராஜாமீது கூறப்படும் புகாரில் உரிய முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய் யலாம்.

- சென்னை உயர்நீதிமன்றம்

(கைதுஎப்போது?இது வும் எஸ்.வி.சேகர் கந்தாயம் தானா?)

அடக்கமாகப் பேசுவாரா?

பொது வெளியில் நடிகர் ரஜினிகாந்த் பேசுவதில் அடக்க உணர்ச்சி இல்லை. பாதிக்கப்பட்ட மக்கள் மீதே குறை கூறலாமா? இனியாவது அடக்கமாகப் பேசுவாரா?

- இரா.முத்தரசன்,

சி.பி.அய். மாநில செயலாளர்

எங்கே எடுத்ததோ!

ஸ்டெர்லைட்டை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் குறித்து ரஜினிகாந்த் கூறிய தற்கு 80 சதவிகித மக்கள் வரவேற்பு!

- தமிழருவி மணியன்

(இந்தப் புள்ளி விவரத்தை எங்கே இருந்து எடுத்தார்?)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner