எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 2 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், பாஜக 282 தொகுதிகளை வென்றதன்மூலம், தனிப்பெரும்பான்மையுடன் நரேந்திர மோடி பிரதமரானார். ஆனால், 2014- ஆண்டுக்குப் பின்னர் 23 தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில், 4 தொகு திகளை மட்டுமே பாஜக தக்க வைத்துள்ளது.

இதனாலும்,கூட்டணிகட்சி களின் தோல்வியினாலும் மக்கள வையில் பாஜக-வின் பலம் தற்போது 272 ஆக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனையும் உள்ளடக்கியதாகும்.பாஜகதனிப் பெரும்பான்மையை இழந்தாலும், பாஜகதலைமையிலானதேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான் மையுடன் உள்ளதால், தற்போ தைக்கு மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை.

கருநாடக சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவை இடைத்தேர்தல் தோல்விகளால், 2019 பொதுத் தேர்தலில் மோடி யின்தலைமையில்பாஜகவெற்றி பெறுமா? என்ற கேள்வி எழுந் துள்ளது.  இந்த சூழலில், சிவ சேனா கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி, தனியே தேர்தலை சந்திக்க இருப் பதாக, அதன் தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.  1990- களில் இருந்து பாஜக-வுடன் தொடர்ந்த உறவை, சிவசேனா முறித்துக்கொண்டுள்ளதுபெரும் அரசியல் திருப்பமாக அமைந் துள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியும் விலகிவிட்ட நிலையில், தற் போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவிழந்துள்ளது. இக்கூட்டணியில் உள்ள குறிப் பிடத்தக்க பெரிய கட்சிகள், அகாலி தளம் மற்றும் மெஹ்பூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சிகள் மட்டுமே. மேலும், இந்தஆண்டுஇறுதிக்குள்நடை பெறவுள்ள ராஜஸ்தான், மத் தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில், அந்த மாநிலங் களில் ஆளும் பாஜக, ஆட்சி யைத்தக்கவைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந் நிலையில், எதிர்க் கட்சிகளின் ஒற்றுமையும், ஆளும் பா.ஜ.க. வுக்கு வலுவான கூட்டணி கட்சி கள் இல்லாததும் 2019 பொதுத் தேர்தல் பாஜக-வுக்கு பெரும் சவாலாக அமையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner