எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோவில் மீது இடி தாக்கி சிலைகள் சேதம்

காடையாம்பட்டி, ஜூன் 4 சேலம் மாவட்டம்,காடையாம்பட் டியை அடுத்த கஞ்சநாயக்கன் பட்டி அருகே  ராக்கிப்பட்டி காலனி உள்ளது. இந்த பகுதியில்  300--க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதன் மத்தியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பெரியாண்டிச்சியம்மன் கோவில் கட்டப்பட்டு குட முழுக்கும் நடைபெற்றது. கோவிலுக்கு பூசாரி ராஜா என்பவர் தினமும் பூஜை செய்து வருகிறார். இந்த நிலை யில் கடந்த சில நாள்களாக சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு காடையாம்பட்டி பகுதியில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. அப்போது கோவில் கோபுரத்தின் மீது இடி தாக் கியது. இதில் கோபுரத்தில் இருந்த சிலைகள் சேதம் அடைந்தன. தகவல் அறிந்த வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர். கோவில் மீது இடி தாக்கி சிலை சேதம் அடைந்த சம்பவம் பொது மக் கள் மத்தியில் அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner