எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாலசோர், ஜூன் 4 அணு ஆயுதங் களை சுமந்து 5 ஆயிரம் கி.மீ. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணையை இந்தியா நேற்று (3.6.2018) வெற்றிகரமாக  பரிசோதித்தது. உள்நாட்டிலேயே தயா ரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணைகள் கடந்த 2012, 2013 ஆம் ஆண்டுகளில் விமானத்தின் மூலம் ஏவப்பட்டது. 3வது, 4வது ஏவுகணைகள் 2015, 2016 ஆம் ஆண்டுகளில் நகரும் ஏவுதளத்தில் இருந்து ஏவி பரிசோதிக்கப்பட்டன. 5 ஆவது அக்னி-5 ஏவுகணை கடந்த ஜனவரியில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒடிசாவின் அப்துல்கலாம் தீவில் இருந்து 5 ஆயிரம் கி.மீ. வரை பாய்ந்து தாக்கக்கூடிய அக்னி-5 ஏவுகணை, நேற்று காலை 9.48 மணியளவில் 6 ஆவது முறையாக வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,

அணு ஆயுதங்களை சுமந்தபடி அக்னி-5 ஏவுகணை, 5 ஆயிரம் கிமீ தூரம் வரை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும். இதில், நவீன தொழில் நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மிகவும் துல்லியமாக இலக்கை தாக்கும் என்றனர். ஏற்கெனவே, 700 கிமீ பாயக்கூடிய அக்னி-1, 2000 கிமீ பாயும் அக்னி-2, 2,500 கி.மீ. செல்லும் அக்னி-3 மற்றும் 3,500 கிமீ பாய்ந்து தாக்கும் அக்னி-4 ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner