எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழக அரசே!

பதில் சொல்லுக!

'நீட்' தேர்வின் முடிவுகளின்படி  10ஆம் வகுப்புகளில்கூட சரி வர எழுதி வெற்றி பெற முடியாத மாணவர்கள் உள்ள உ.பி. முதல் இடமாம்!

பீகார், ராஜஸ்தான், ஹிந்தி மாநிலங்கள் முன்னணியிலாம்!

'வியாபம்' ஊழல் புகழ் மத்தியப் பிரதேசம் கூட முன்னால் உள்ளது!

கல்வியில் - இந்தியாவிற்கே வழிகாட்டியும், அதிகமான மருத் துவக் கல்லூரிகளும் இரட்டை இலக்கத்தில் மருத்துவ உயர்பட்டப் படிப்பு, 'சூப்பர்ஸ்பெஷாலிட்டி' என்ற அதிமேல் பட்டப் படிப்பு இடங்களும்  உடைய தமிழ்நாடு 34ஆவது இடத்திலாம்!

அதிக மதிப்பெண்கள் வாங்கிய பட்டியலில் 50 முதல் இடங்களில் ஒரே ஒரு இடம் தான் தமிழ்நாட்டிற்கு!

'நீட்' தேர்வு தோல்வியால் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். முன்பு அரியலூர் அனிதா; இப்பொழுது விழுப்புரம் மாவட்டத்தில் பிரதிபா பலியாகி உள்ளார். நம் நெஞ்சத்தை பிழிகிறது!

இதில் மறைந்துள்ள மர்மம்தான் என்னவோ! ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 'நீட்' தேர்வு விலக்கு அளிக்கும் மசோதாக்களின் கதிதான் என்ன?

இதில் நடந்துள்ள மிகப் பெரிய கொடுமை - கொடுமையிலும் கொடுமை என்ன தெரியுமா? தோழர்களே! இந்தப் பாழாய்ப் போன 'நீட்' தேர்வால் தமிழ்நாட்டுக்கு பறிபோன இடங்கள் 1450.

நெஞ்சு பொறுக்குதில்லையே!

இதற்கொரு முடிவு கண்டாக வேண்டாமா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner