எழுத்துரு அளவு Larger Font Smaller Font

12 ஆம் வகுப்பில் பள்ளிக்குச் செல்லாமலேயே நீட்' தேர்வில் முதலிடம்!

தகுதி - திறமைப் பித்தலாட்டம் இதுதானா?

பாட்னா, ஜூன் 8 நீட்' தேர்வில் இந்தி யாவிலேயேமுதல்மதிப்பெண்பெற் றுள்ள பிகாரைச் சேர்ந்த பார்ப்பன மாணவி,பிளஸ்டூவில்பள்ளிக்குச் செல்லாமலேயே, போதியவருகைப் பதிவுஇல்லாமலேயே பிளஸ் டூ தேர்வு எழுதியதும், பள்ளிக்குச் செல்லாமல் அதே காலகட்டத்தில் டில் லியில் தங்கி நீட்' பயிற்சி பெற் றவர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளிவந்துள்ளது. இந்தப் பெண் ணின் தந்தை பிகார் கல்வித் துறையில் முக்கியப் பொறுப்பில் உள் ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப் படையில் நடத்தப்பட்டு வந்த மருத்துவ மாணவர் சேர்க்கை முறை ரத்து செய்யப் பட்டு, மருத்துவ படிப்பில் சேர்வதற்கு தேசிய அளவிலான நீட்' நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நீட்'தேர்விற்குதமிழகம்கடுமை யானஎதிர்ப்புதெரிவித்தாலும்,கடந்த இரண்டுஆண்டுகளாகநீட்'தேர்வு நடத்தப்பட்டுவருகிறது.நீட்'தேர்வுமதிப்பெண்ணைஅடிப் படையாக வைத்து மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழக மாணவர்கள்கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர்.தமிழகமாண வர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படு வதாக தமிழகம் கொந்தளிக்கிறது.

நீட்' தேர்விற்கு ஒருபுறம் எதிர்ப்பு தெரிவித்தாலும், மறுபுறம் தமிழக மாண வர்களை நீட்' தேர்விற்குத் தயார் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இந்த ஆண்டு நடந்த நீட்' தேர்வில் தமி ழகத்தைச் சேர்ந்த 39.9% மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

பள்ளி வருகை தேவையில்லையாம்!

தேர்வு எழுத வேண்டுமானால் பள்ளிக்கு இத்தனை சதவிகித நாள்கள் வந்திருக்கவேண்டும் என்பது விதி. ஆனால், நீட்' தேர்வில் அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற பிகார் மாணவி பள்ளிக்குச் செல்லாமலேயே, குறைந்தபட்ச வருகையில்லாமலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிளஸ் டூ படிக்கும் பிகாரைச் சேர்ந்த அந்த மாணவி, அந்தக் காலகட்டத்தில் - பள்ளிக்குச் செல்லாமல் டில்லியில் தங்கி நீட்' தேர்வுக்கான பயிற்சியைப் பெற்றுள்ளார் என்பது அடிகோடிட்டுக் கவனிக்கத்தக்கது.

இதுகுறித்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டபோது, இந்த ஆண்டுமுதல் அந்த விதி மாற்றப்பட்டுள்ளதாம். எப்படி இருக்கிறது? ஒரு மாணவிக்காகவே விதியை அரசு திருத்தியுள்ளது என்றால், இது எத்தகைய மோசடி!

தகவல் அறியும் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்வியும் - பதிலும்!

இந்த ஆண்டு நடந்த நீட்' தேர்வில் பீகாரை சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி 691 மதிப் பெண்களை பெற்று தேசிய அளவில் முதலிடத்தை பிடித்தார். கல்வியில் பின் தங்கிய மாநிலமாக உள்ள பிகார் மாநில மாணவி தேசிய அளவில் நீட்' தேர்வில் முதலிடம் பிடித்தது பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த மாணவி குறித்த சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கான வருகைப் பதிவு அந்தமாணவிக்கு இல்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது. பிகார் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த அந்த மாணவி, நீட்' தேர் விற்காக டில்லியில் தங்கி கடந்த இரண்டு ஆண் டுகளாக தயார் செய்துவந்துள்ளார். டில் லியில் தங்கி படித்ததால், பிகாரில் உள்ளஅவர் படித்த பள்ளியில் வகுப் பிற்கு சரியாக செல்லவில்லை. அதனால் பொதுத்தேர்வுஎழுதுவதற்கானவருகைப் பதிவு அவருக்கு இல்லை. ஆனாலும் பொதுத்தேர்வு எழுதிய அந்த மாணவி 500-க்கு 433 மதிப் பெண்கள் பெற்றுள்ளார்.

வருகைப்பதிவு குறித்து எழுந்த சர்ச்சை தொடர்பாக பேசிய அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கிருஷ்ணாந்த், நீட்' தேர்வில் முதலிடம் பிடித்து மாணவி கல்பனா குமாரி பிகாருக்குப் பெரிய அளவில் பெருமை சேர்த்துள்ளார். அதை அனைவரும் பாராட்டவேண்டும். அதை விடுத்து அவரது வருகைப் பதிவு குறித்து சர்ச்சை எழுப்புவது தேவையில்லாதது. உரிய விதி முறை களை பின்பற்றியே தேர்வு எழுத அனு மதிக்கப்பட்டார். அவரை பற்றி யாரும் சர்ச்சை எழுப்ப வேண்டாம்'' என தெரிவித்துள்ளார்.

பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த கல் பனாவின் தந்தை பிகார் மாநில பள்ளிக் கல்வி துறையில் ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கும் பேராசிரியர் குழுவின் தலைவராக உள்ளார், இவரது தாயார் அரசு பெண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார்.

எப்படி இருக்கிறது பி.ஜே.பி. ஆட் சியின் பித்தலாட்டம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner