எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஜூன்9கருநாடகத்தில்சிந் தனையாளர்எம்.எம்.கல்புர்கி,பத்திரிகை யாளர் கவுரிலங்கேஷ் ஆகிய இருவருமே ஒரே வகை துப்பாக்கியால்தான் சுடப்பட் டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் குறிப் பிடப்பட்டுள்ளது. மேலும், இருவர் மீதும் ஒரே நபராலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முற்போக்குச் சிந்தனையாளரும், அறிஞருமான பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி, கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30- ஆம் தேதி சங்-பரிவாரத்தைச் சேர்ந்த இந்துத்துவ பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்ப வம் ஏற்படுத்திய தாக்கம் குறைவ தற்கு உள்ளாகவே, மறைந்த கன்னட எழுத்தாளர் பி. லங்கேஷின் மகளும், மூத்த பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் (55) 2017- ஆம் ஆண்டு செப் டம்பர் 5- ஆம் தேதி சுட்டுக் கொல் லப்பட்டார்.

இந்த இரு சம்பவங்களுமே நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தின. கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியஇருவரும் சாதியமைப்பு, மனு தர்மத்திற்கு எதிராக போராடி வந்தவர்கள் என்ற நிலையில், அவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டதால், இக்கொலைகளின் பின்னணியில் சங் பரிவாரங்கள் இருக் கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதற்கேற்ப சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த 2 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், தடய வியல் குற்றப் பத்திரிகை 3-ஆவது தலைமை பெருநகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகிய இருவரின் கொலைகளும் ஒரே துப்பாக்கியால்தான்நடந்துள்ளது;ஒரே நபரே இருவரையும் சுட்டுக் கொன் றுள்ளார்; 7.65 மி.மீ. காலிபர் துப்பாக்கி தோட்டாக்களுக்கு பயன்படுத்தப்பட் டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கவுரி லங்கேஷ் உடலில் மூன்று தோட்டாக்கள் எடுக்கப்பட்டது; ஒரு புல்லட் அவர் மீது படாமல் தவறியதையும் சேர்ந்து மொத்தம் 4 தோட்டாக்கள்ஏவப்பட்டுள்ளன; நவீன் குமார்என்பவர் இக்கொலையில்சம் பந்தப்பட்டுஇருக்கிறார்என்றும் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner