எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அகமதாபாத், ஜூன் 9 குஜராத்தின் அகமதாபாத் பகுதியில் நாற் காலியில் உட்கார்ந்ததற்காக, தாழ்த்தப்பட்ட அங்கன்வாடி பெண்பணியாளர், கட்டை, இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தின் அக மதாபாத் பகுதியில் உள்ள ஒரு அங்கன்வாடி மய்யத்தில் பல்லவி ஜாதவ் (48) என்பவர் பணியாற்றிவருகிறார். தாழ்த் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவருக்கு ஆதார் அட்டைகளை விநியோகம் செய்யும் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, அவர் ஆதார் அட்டைகளை வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் பணி நிமித் தமாக அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்ற பல்லவி ஜாதவ், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துள்ளார். இதனைக் கண்ட ஜெய்ராஜ் சின்ஹ் என்பவர், பல்லவி அமர்ந்த நாற்காலியை உதைத்து தள்ளியதுடன்,பல்லவிமீது கட்டை, இரும்புக் கம்பி களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார். அவருடன் மேலும் 9 பேர் சேர்ந்து தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். தகவல் அறிந்த பல்லவியின் கணவர், மகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பல்லவியை மீட்டு அருகில் இருந்த தனி யார் மருத்துவமனையில் அனு மதித்துள்ளனர்.தற்போதுபல் லவியின் புகார் அடிப்படை யில் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்யப்பட்ட அனைவரும் தர்பார் என்ற ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த வர்கள் ஆவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner