எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உ.பி.யில் ரயில் நிலையத்துக்கு பெயர் மாற்றம்

ஆர்.எஸ்.எஸ். உபாத்யாயா பெயராக மாற்றம்

 

லக்னோ,ஜூன்9பாஜக மத்தியிலும், சில மாநிலங் களிலும் ஆட்சிப் பொறுப் பேற்ற பிறகு இந்துத்துவாவத் திணிப்பின் ஒரு பகுதியாக அரசின் திட்டங்களின் பெயர்களில்மாற்றம்செய் தது. அதேபோல், நகரங் களின் பெயர், ரயில் நிலைய சந்திப்பு பெயர்களில் மாற் றங்களைசெய்வதாகக்கூறிக் கொண்டு,ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் பெயர் களாகமாற்றிவருகிறது.சில இடங்களில் பெயர் மாற்றத்தின்போது மதவாதக் கண்ணோட்டத்தில் மாற்றி வருகிறது. வளர்ச்சி, குறைந்த நிர்வாகம் நிறைந்த ஆளுமை என்றெல்லாம் கூறிக்கொண்டு ஆட்சியைப் பிடித்த பாஜக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், அறிவிக்காத பல்வேறு மக்கள் விரோத திட்டங்களையே செயல்படுத்தி வந்துள்ளது.

அரியானா மாநிலத்தில் கூரேகான் எனும் நகரின் பெயரை குருகிராமம் என்று மாற்றியது.

தற்போது, உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசு  ரயில் நிலையத்தின் பெயரில் ‘முகல்சராய் சந்திப்பு’ என்பதை ‘பண்டிட் தீனதயாள் உபாத்யாயா சந்திப்பு’ என மாற்றி உத்தர விட்டுள்ளது.

வரலாற்று ரீதியில் பெயரிடப்பட்ட பல்வேறு திட்டங்கள், சாலைகள், நகரங்களின் பெயர்களை இந்துத்துவா, மதவாத கண்ணோட்டத்துடன் ஆளும் அதிகாரத்தைக்கொண்டு மத்தியிலும், உ.பி. போன்ற மாநிலங்களிலும் பாஜக அரசுகள் மாற்றம் செய்து வருகின்றன.

உ.பி.யில் தோல்வி ஏன்?

லக்னோ, ஜூன் 9 கைரானா மற்றும் நூர்பூர் இடைத்தேர்தல்களில் உத்தரப்பிரதேசத்தில்,பாஜகதோல்வியடைந்ததற்கு ‘‘முதல்வர்  சாமியார் ஆதித்யநாத் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை, கோரிக்கைகளை புறந்தள்ளியதாலேயே நாம் தோல்வியைத் தழுவினோம்'' என அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சரே  கூறியிருப்பது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கருநாடகா உட்பட 10 மாநிலங்களில் உள்ள 4 மக்களவை, 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில், உத்தரப் பிரதேசத்தில் கைரானா மக்களவை தொகுதி மற்றும் நூர்பூர் சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த இரண்டிலுமே பாஜக தோல்வியடைந்தது. ஒட்டு மொத்தமாக இந்த இடைத்தேர்தல்களில் பாஜக படுதோல்வியை தழுவியது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜக, இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்ததற்கு அம்மாநில முதல்வர்  சாமியார் ஆதித்யநாத் தான் காரணம் என அவரது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் ராஜ்பார் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜ்பார், ‘‘இடைத்தேர்தல் தோல்விக்கு சாமியார் முதல்வர் தான் காரணம். அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட  சமூகத்தினர்  புறக்கணிக்கப்பட்டுள்ளனர். நமது வாக்குவங்கி பணக்காரர்களும், உயர்ஜாதியினர் மட்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தால் நாம் ஒரு இடம் கூட பெறமுடியாது. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை நாம் அரவணைத்துச் செல்லவேண்டும். அப்போதுதான் நமக்கு வெற்றி கிடைக்கும். ஆனால் சாமியார் முதல்வர் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டமக்களை பார்ப்பது கூட தேவையற்ற ஒன்று என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார். அதுவே நமக்கு மிகப்பெரிய பின்னடைவு'' என்று கூறினார்.

முசுலிம் வாக்காளர்களைக் காணவில்லை

சச்சார் கமிட்டியின் செயலாளர் கபூசா லெஹ் ஷெரீப் தலைமையில் உள்ள தொண்டு நிறுவனம் ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 12 இலட்சம் முசுலிம் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாதிரியாக சென்னை துறைமுகம், கோவை தொண்டாமுத்தூர் மற்றும் குமரி மாவட்டம் பத்மநாபபுரம் ஆகிய தொகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. துறைமுகம் தொகுதியில் மட்டும் 30 விழுக்காடு முசுலிம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குட்டி நாட்டுக்குமுன் குட்டிக்கரணம்

குட்டி நாடான வங்கதேசத்தின்முன் குட்டிக்கரணம் அடிக் கிறது இந்தியா என்றால், ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

ஆனால், உண்மை அதுதான்.

2020 ஆம் ஆண்டில் இந்தியாவைவிட வங்கதேசம் தனி நபர் வருவாயில் முன்னிலையில் இருக்கப் போகிறது. 2016 ஆம் ஆண்டுடனான மூன்று ஆண்டுகளில் வங்க தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தற்போதைய டாலர் மதிப்பீட்டில் 12.9 விழுக்காடு வளர்ச்சி; ஆனால், ‘பாரத புண்ணிய பூமி'யிலோ அது வெறும் 5.6 விழுக்காடே!

இந்தியாவுக்கு ‘முதல் பரிசு!'

இந்தியாவுக்கு முதல் பரிசு எதில் தெரியுமா? காசநோயால் குழந்தைகள் பாதிக்கப்படுவதில் இந்தியாவுக்கு முதல் பரிசு. ஜெனிவாவைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச சுகாதார அமைப்புதான் இதைக் கூறுகிறது. 2016 ஆம் ஆண்டில் காசநோயால் பாதிக்கப்பட்ட 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்தியாவில் 1.2 லட்சம். இரண்டாவது இடத்தில் இருப்பது சீனா.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner