எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உ.பி. பா.ஜ.க. ஆட்சிக்கு

டாக்டர் கபீல்கான் எச்சரிக்கை

லக்னோ, ஜூன் 13 -எந்தவித மிரட்டல்களுக்கும் அஞ்ச மாட்டேன்; வீணாக என்னை மிரட்டிப் பார்க்க வேண்டாம் என்று உத்தரப்பிரதேச மாநி லத்தில் 63 குழந்தைகளைக் காப்பாற்றிய டாக்டர் கபீல்கான் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவ மனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததால் பச்சிளங் குழந் தைகள் உயிரிழந்த அவலம் அரங்கேறியது. அப்போது அங்கு பணியாற்றிய மருத்துவர் கபீல்கான் தன்னுடைய சொந்தச் செலவில் சிலிண்டர் வாங்கி 63 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார். ஆனால், உத் தரப்பிரதேச பாஜக அரசானது, பணியில் கவனக் குறைவாக இருந்தார் என்று கூறி டாக்டர் கபீல்கான்மீதே வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, கபீல்கான் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இதனிடையே, இரண்டு நாள்களுக்கு முன்பு கபீல்கானின் சகோதரர் காஷிப் ஜமீல் கோரக்பூரில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுடப்பட்டார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவ மனையில்சேர்த்தனர்.தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜமீல், தற்போது அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே,தனதுசகோ தரர் சுடப்பட்டது குறித்து, ட்விட்டரில் டாக்டர் கபீல் கான்கருத்துஒன்றைப்பதிய விட்டுள்ளார்.அதில்,தனது சகோதரனுக்கு சிகிச்சை அளிக்க விடாமல் காவல்துறையினர் 3 மணிநேரம் காலதாமதம் செய்ததாகவும்,ஆனால்,தனது சகோதரன்உயிர்பிழைத்துவிட்ட தாகவும் கூறியிருப்பதுடன், மேலும், எந்தவித மிரட்டலுக் கும் தான் அஞ்சமாட்டேன் என்றும், தன்னை மிரட்டி பணிய வைக்க முடியாது எனவும் பாஜக ஆட்சியாளர்களை மறை முகமாக எச்சரித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner