எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஜூன் 13 கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில், மேலும் ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கருநாடகக் காவல் துறை சிறப்புவிசாரணைகுழு,இந்த கொலை வழக்கை விசாரித்து வருகிறது.விஜய்புரா மாவட் டம், சிந்தகி நகரைச் சேர்ந்த பரசுராம்வக்மாரே(26)என்பவரை விசாரணைக் குழு கைது செய்தது. இந்தக் கொலை வழக்குத் தொடர்பாக ஏற்கெனவே 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பரசுராம் 6- ஆவது நபராவார்.

இதுகுறித்து சிறப்பு விசார ணைக் குழுவின் அய்ஜியான பி.கே.சிங்,பெங்களூரில்செய் தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை கூறியதாவது:

கவுரி லங்கேஷை பரசுராம் தான்கொன்றார்என்றுஉறுதி பட கூற முடியாது. ஊடகங் களில் வெளியாகும் செய்திகளில் தான் அவ்வாறு கூறப்பட்டு வருகிறது. அந்தக் கொலைக்காக அவர் சதித்திட்டம் தீட்டியிருக் கிறார். வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்பதால் இது தொடர்பாக அதிக தகவல்களை கூற முடியாது என்றார் சிங்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner