எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சங் பரிவார் தலைவர் உளறல்

நாசிக், ஜூன் 13 எனது தோட்டத்தில் விளைந்த மாம்பழத்தைச் சாப்பிட்டவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இந்துத்துவா தலைவர் சாம்பாஜி பிடே கூறியுள்ளார்.

மகாராஷ்டிரத்தின் பீமா கோரேகானைச் சேர்ந்தவர் சாம்பாஜி பிடே. இந்துத்துவா தலைவர்களில் ஒருவர். அண்மையில் தலித்துக்கள் நடத்திய விழாவில் வன்முறை நடத்தியதாக கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வந்திருப்பவர். இந்நிலை யில், அவர் நாக்பூரில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்று பேசியுள்ளார். அதில், மாம்பழங்கள் சுவையானவை மட்டுமல்ல; சக்தி தரக்கூடியவை என்றுகூறியுள்ள சாம்பாஜி, என்னுடைய தோட்டத்தில் விளைந்த மாம்பழத்தைச் சாப்பிட்ட பல ஆண் களுக்கும் பெண்களுக்கும் மகன்கள் பிறந்துள்ளனர் என்று தெரி வித்துள்ளார். மேலும், மாம்பழத்தின் சக்தி குறித்து ஏற்கெனவே இராமாய ணத்திலும், மகாபாரதத்திலும் விரிவாக கூறப்பட்டுள்ளதாகவும் உளறியுள்ளார்.

ஆசிரமம் வந்த பெண்ணிடம் பாலியல் வன்முறை:

சாமியார் தாதி மகராஜ்மீது வழக்கு

புதுடில்லி, ஜூன் 13 டில்லியில் ஆசிரமம் நடத்தி வரும் தாதி மகராஜ் எனும் சாமியாரும் அவரது சீடர்களும் சேர்ந்து, 25 வயது பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

டில்லியில் ஆசிரமம் நடத்தி வருபவர் தாதி மகராஜ். இவர், தனது ஆசிரமத்திற்கு வந்த 25 வயது பெண் ஒருவரை, தனது சீடர்களுடன் சேர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல ஆண்டுகளாக தொடர்ந்து அவரை மிரட்டி, டில்லி, ராஜஸ்தானில் உள்ளஆசிரமங்களிலும் தாதி மகராஜின் சீடர்கள் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனநிலையும், உடல் நிலையும் பாதிக்கப்பட்ட அந்த பெண், தற்போது தனது பெற்றோருடன் சென்று தெற்கு டில்லியல் உள்ள பதேபூர் பெரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் தாதி மகராஜ் உள்ளிட்டோர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாதி மகராஜ், தன்னைத்தானே கடவுளாக அறிவித்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner