எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சொல்லுகிறார் பி.ஜே.பி. எம்.பி.,

லக்னோ, ஜூன் 13 இந்தியாவில் மோடியும்,சாமியார்ஆதித்ய நாத் மட்டுமே நேர்மையான வர்கள்என்றும்,மற்றவர்கள் எல்லோருமே நேர்மையற்ற வர்கள் என்று  உத்தரப்பிரதேச பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் தெரிவித்துள்ளார்.

புதிது புதிதாக சர்ச்சைகளை கிளப்புவதே பாஜக தலைவர் களுக்கு தினசரி வேலையாகி விட்டது. அந்த வரிசையில் உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் புது சர்ச் சையைகிளப்பியுள்ளார்.வட உத்தரப்பிரதேசம்  கோண்டா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், நரேந்திர மோடி ஊழலே செய் யாதவர். இதேபோல உத்தரப் பிரதேச முதல்வர் சாமியார் ஆதித்யநாத்மீதும் எவ்வித ஊழல் குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது. ஆனால் இதர பாஜக தலைவர்கள் அப்படி இல்லை. அவர்களுக்கு அத்தகைய உத்தரவாதத்தை அளிக்க முடியாது. அவர்கள் நேர்மை என்ற சொல்லுக்கு தகுதியானவர்கள் இல்லை'' என தடாலடியாகப் பேசியிருந்தார். இந்த சர்ச்சைப் பேச்சு பாஜக கட்சி வட்டாரத்தில் கடும் அதி ருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு காங்கிரசு தலைவர் ராகுல் காந்தியை பிரிஜ்பூஷண் சரண் தரக் குறைவாக விமர்சனம் செய்தார். அப்போது காங்கிரசு கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner