எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இதைத்தான் அன்றே தமிழர் தலைவர் சொன்னார் (28.5.2018)

உயர்நீதிமன்றம் யோசனை

மதுரை, ஜூன் 14 ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கையை அரசின் கொள்கை முடி வாக அறிவிக்கலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன் கிழமை யோசனை கூறியுள்ளது.

இந்தக் கருத்தைத்தான் செய்தியாளர்களி டையே தஞ்சாவூரில் திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி சொன்னார் (28.5.2018) என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ வழக்கு தொடர்ந்தி ருந்தார். இதற் கிடையே மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப் பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகள்மீது கொலை வழக்குப் பதிவு செய் வது, இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு, சிபிஅய் விசாரணை கோரு தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை முன் வைத்து 14 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 14 வழக்கு களும் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் முன் புதன் கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு வழக்குரைஞர் வாதிடு கையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக் கில்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குடும்பத் துக்கு ரூ. 20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்க முடிவு செய் யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மூத்த அய்ஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் அதிகாரி கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள் ளனர் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், துப் பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நிவா ரணம் வழங்கி அவர்களின் உயிரை மதிப்பிட முடியாது என்றனர்.

இதனைத் தொடர்ந்து வைகோ தரப்பு வழக்குரைஞர் வாதிடு கையில், கடந்த மாதம் 2 ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசா ணையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், காற்று மாசுபடுதல், தண்ணீர் மாசு படுதல் குறித்த சட்டப்பிரிவுகளின் அடிப் படையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக் கப்பட்ட அனுமதி காலாவதியாகிவிட்டது. மீண்டும் புதிதாக அனுமதி கொடுக்கவில்லை என்பதால் ஆலை நிரந்தரமாக மூடப்படு கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

இதை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் தீர்ப்பாயத்திலோ அல்லது நீதிமன் றத்திலோ மேல்முறையீடு செய்து அனுமதி பெற்றால் தமிழக அரசாணை செல்லாததாகி விடும். எனவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான காரணங்களை விளக்கமாக பட்டியலிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக இந்திய அரசியல் சட்டத் தின் 48-ஆவது பிரிவு (ஏ) கீழ் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கவேண்டும். அப் போதுதான் ஆலையை நிரந்தரமாக மூடும் சூழல் உருவாகும் என்றார்.

இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், மாசுக் கட்டுப்பாடு சட்டப்பிரிவுகளின் கீழ் ஸ்டெர் லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் அனுமதி கொடுக்காததை மட்டுமே குறிப்பிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு வழங்கிய அரசாணை திட்டவட்டமாகவும், தெளி வாகவும் இல்லை. எனவே ஆலையை நிரந் தரமாக மூடுவது குறித்து கொள்கை முடிவாக எடுத்து தமிழக அரசு ஆணை பிறப் பிப்பதற்கு இந்த நீதிமன்றம் யோசனை கூறுகிறது. இந்த யோசனையை தமிழக அரசுக்கு அரசு வழக் குரைஞர் தெரிவிக்க உத்தரவிட்டு விசார ணையை ஜூன் 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த னர்.

அப்போது துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கு தொடர்ந்த வழக்குரைஞர்கள், ஸ்டெர் லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர் களை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தொந்தரவு செய்வதாகத் தெரிவித்தனர். அதற்கு, உரிய ஆதாரங் களுடன் மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

தமிழர் தலைவர் கருத்து

அமைச்சரவையிலே  எடுக்கப்பட்ட இந்த முடிவு கொள்கை முடிவு (Policy Decision) என்பதை ஓங்கி அடித்து உச்ச நீதிமன்றத்திலே சொல்ல வேண்டும்.  ஏற்கெனவே உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பலவற்றிலே, கொள்கை முடிவை எதிர்த்து தீர்ப்புக் கொடுக்க முடியாது என்று நீதிமன்றம் சொல்லியுள்ளது.  மக்கள் விரோதமாக இருக்கக்கூடிய, சுற்று சூழலுக்கு விரோதமாக இருக்கக் கூடிய -அந்த ஆலை மூடப்பட வேண்டும் என்பதிலே உறுதியாக இருக்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் சீல் வைத்தார் என்ற காட்சி மட்டும் போதாது. கடைசி வரை இந்த முயற்சிகளுக்கே அரசு சீல் வைத்தது என்ற அளவிலே அரசு இதை கொண்டு செலுத்த வேண்டும். பாதி கிணறு தாண்டக்கூடாது. முழுக்கிணறையும் முழு மையாகத் தாண்டினால்தான், முழு நம் பிக்கை மக்களுக்கு வரும். மீண்டும் தூத் துக்குடி பழைய நகரமாக, சுமுகமான நகர மாக  ஆக  வேண்டும். இந்த நிலையிலே இருந்து மாற்றத்தை உருவாக்க வேண் டும். இப்போதைக்கு இது வரவேற்க வேண் டியது; போகப் போகத்தான் இந்த முடி விற்குஇறுதியானவரவேற்பைக் கூற முடியும். (விடுதலை', 29.5.2018).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner