எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திலும் குடிநீர் உள்பட பல பயன்பாடுகளுக்கு 10 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பிளாஸ்டிக் பொருள் முற்றிலும் அழிய ஆயிரம் ஆண்டுகள் ஆகுமாம்!

பறிமுதல்

சென்னைப் பெருநகர சுகாதாரத் துறை ஒரு நல்ல காரியத்தில் ஈடுபட்டுள்ளது. அதுதான் பிளாஸ்டிக் பொருள் கள் பறிமுதல். ரூ.20 லட்சம் மதிப்புள்ள 3,895 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகள்

இந்தியாவில் நகர்ப்புறங் களில் 20 லட்சம், கிராமப்புறங் களில் 80 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக யுனிசெப் ஆய்வுத் தகவல். (குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலாம்).

பூமி பூஜை

திருவள்ளூர் மாவட்டம் மணலியில் புதிய காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது, 50 லட்சம் ரூபாய் செலவில் - காணொலி காட்சிமூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார். அதெல்லாம் சரி, இதனைத் தொடர்ந்து புதிய கட்டடத்தில் ஹோமம் வளர்த்து, புரோகிதர்களை வர வழைத்து வேத மந்திரங்கள் ஓதப்பட்டுள்ளன.

முதலமைச்சரே பூசாரியாக இருந்தால், அவரின்கீழ் பணி யாற்றும் அலுவலர்கள் எப்படி இருப்பார்களாம்?

பற்றாக்குறை

சென்னைப் பெருநகரை ஒட்டிய 5 ஊராட்சிகளில் துப்பு ரவுத்தொழிலாளர்களின்பற் றாக்குறையால்சுகாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள் ளது.

சுவச்' பாரத் என்னாச்சு?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner