எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிவசங்கரியும் - கடவுளும்!

13.6.2018 அன்று சென்னை நாரதகான சபா மண்டபத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர் கள் எழுத்துலக வேந்தரும், ஞான பீட' விருது பெற்றவருமான ஜெய காந்தன் பற்றிய ஆய்வுக் கட்டுரை வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. மண்டபமே நிரம்பி வழிந்தது.

எழுத்தாளர் சிவசங்கரி நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றினார். இடையிடையே தனக்குள்ள கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

கவிப்பேரரசுக்கு இறை நம் பிக்கை இல்லை என்பது தனக்குத் தெரியும் என்றும் குறிப்பிடத் தவற வில்லை.

எது கடவுள், எது நம்பிக்கை என்பது பற்றிக் கவிப்பேரரசு அவர் கள் தனக்கே உரித்தான முறையில் பதிலும் அளித்தார்.

இந்த இடத்தில் பல ஆண்டு களுக்கு முன் நிகழ்ந்த ஒன்றை நினைவூட்டுவது பொருத்தமானது. குமுதம்' இதழுக்காக (19.2.1997) இந்துமதி, சிவசங்கரியைப் பேட்டி கண்டார்.

அதன் விவரம் இதோ:

இந்துமதி: சமீபத்தில் அமெ ரிக்கா போயிருந்தீர்களே - அதைப் பற்றிச் சொல்லுங்கள்.

சிவசங்கரி: அமெரிக்க அரசாங் கத்தின் அழைப்பின் பேரில் சென் றிருந்தேன். அயோவா பல்கலைக் கழகத்தில் நடைபெறும் எழுத்தாளர் முகாமிலிருந்து இது மாறுபட்டது.

நான்கு வாரம் அமெரிக்காவைச் சுற்றிப் பார்க்க வாய்ப்புத் தந்தார்கள். சின்ன வயதிலிருந்தே அப்பா - அம்மாவுடன் இருந்துவிட்டு கல்யாணமும் 19 வயதில் ஆகிவிட் டதால், தனியா ஒரு போதும் வாழ்ந்து பழக்கப்பட்டவர் இல்லை. முந்தைய தடவைகளில் வெளிநாடு சென்ற போதும் கணவருடன்தான் போனேன்.

இந்தத் தடவைதான் ஒரு மாறுதல், எனக்கென்று ஒரு தனி அறை. மற்ற எழுத்தாளர்களோடு கலந்து பேசிப் பழகினது ஒன்றாகப் பயணம் செய்தது எல்லாம் நூதன மான அனுபவமாக இருந்தது.

அப்போது கி.வீரமணி அவர் களைப்பற்றி (விடுதலை' ஆசிரியர்) நினைத்துக் கொண்டேன். குமு தம்'இதழுக்காகஅவருடன்ஒரு உரையாடல்சந்திப்புநிகழ்த்தி னார்கள்.(1.12.1983)தெய்வ நம்பிக்கை யைப் பற்றி எங்கள் இருவரிடையே பேச்சு எழுந்தது. நானும் விட வில்லை.

எனக்கு இப்போது என்ன குறைந்துபோய்விட்டது.தெய்வ நம்பிக்கை உள்ள நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்று எதிர்வாதம் செய்தேன்.

வீரமணியும் விடவில்லை.

நானே துணை' என்று (தெய் வத்தை நம்பி இராமல்) நினைத்துப் பாருங்கள். அப்படி நினைக்க, நினைக்க உங்கள் பேரில் உள்ள தன்னம்பிக்கை கூடும் என்றார்.

என்றைக்காவது அவரைச் சந்தித்து, நீங்கள் சொன்னது சரி என்று சொல்லவேண்டும்'' என்று எண்ணுகிறேன்.

கணவர் சந்திரா இறந்த பிறகு, நான் யார்மீதும் சாயக்கூடாது என்று பிடிவாதமாக இருக்கிறேன். கடவுள் மீதுகூட ஓரளவு நான் சாயறதில்லை. கசப்போ வெறுப்போ கிடையாது. என் காலில் உறுதியாக நிற்க நான் பழகிக் கொள்ளவேண்டும் என்று எண்ணுகிறேன். அப்படி நினைக்கும்போது எனக்கு இப் போது தன்னம்பிக்கை நிறையக் கூடி இருக்கிறது. முன்பெல்லாம் இருட்டிலேபோகமாட்டேன்.தனியாகப் பயணம் செய்தால் பயமாக இருக்கும். அதெல்லாம் மாறி, எல்லாவற்றையும் அதனதன் இயல்போடு எடுத்துக் கொள்கிற பக்குவம் வந்திருக்கிறது'' என்று கூறினார் சிவசங்கரி.

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner