எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வுக்கு ராகுல் கண்டனம்

புதுடில்லி, ஜூன் 16 மராட்டிய மாநிலத்தில் மற்றொரு ஜாதியி னருக்குச் சொந்தமான கிணற்றில் குளித்த தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் மீது உயர்ஜாதி வகுப்பினர் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபட்ட அந்த மனித மிருகங்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

மராட்டிய மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தில் 2 தாழ்த் தப்பட்ட சிறுவர்கள், ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த தவறு, மற்றொரு ஜாதியினருக்குச் சொந்தமான கிணற்றில் குளித் ததுதான்.

ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதாவின் மனுதர்மம் பரப்பிய இத்தகைய நச்சுத்தன்மை நிறைந்த வெறுப்புணர்வு அரசியலை நாம் எதிர்க்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு இல்லை

சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு

சுவிஸ், ஜூன் 16 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு இல்லை என சுவிஸ் நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

சுவிஸில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக 13 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. சுவிஸின் பெலின்சோனா நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.

இவ்வழக்கில் சுவிஸ் அரசு சார்பில், விடுதலைப் புலிகள் இயக்கம் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை நீதிமன்றம் நிராகரித்ததுடன், இலங்கையிலும், வெளிநாடுகளிலும் விடுதலைப் புலிகள் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை. அது பயங்கரவாத அமைப்பு இல்லை எனவும் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.

மேலும் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டோரை வழக்குகளில் இருந்தும் சுவிஸ் நீதிமன்றம் விடுவித்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner