எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'அந்தோ, கடவுள் இவரையும் காப்பாற்றவில்லையே!'

பீமாவரம், ஜூன் 16 கோயிலில் மூல வரான சிவனுக்கு பூஜை செய்து கொண்டிருந்த அர்ச்சகருக்கு நேற்று காலை சன்னதியிலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த காட்சிகள் அங்குள்ள கண் காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரத்தில் சோமேஷ்வரர் கோயில் உள்ளது. பழங்கால கோயிலான இங்கு, நேற்று மூலவருக்கு இக்கோயிலின் பிரதான அர்ச்சகர் ராமாராவ் பூஜைக் கான ஏற்பாடுகளை செய்துகொண் டிருந்தார். அப்போது திடீரென அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனை கண்ட சக அர்ச்சகர் ஒருவர் ஓடி வந்து அவரை நிதானமாக எழுப்பி நிற்க வைத்தார். அடுத்த சில விநாடிகளிலேயே மீண்டும் அர்ச்சகர் ராமாராவிற்கு 2 ஆவது முறையாக கருவறையிலேயே மாரடைப்பு ஏற் படுகிறது.

மாரடைப்பினால் மரணமடை வதற்கு சில விநாடிகளுக்கு முன்னால் அர்ச்சகர்... அப்போது அவர் நிலை தடுமாறி மூலவரின் சிலை மீது விழுந்து தனது உயிரை துறக்கிறார். இந்தக் காட்சிகள் அங்குள்ள கண் காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த வீடியோ காட்சிகள் ஆந்திர மாநிலத்தில் வைரலாக பரவி வருகின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner