எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அட, கேவலமே!

பெருந்துறை, ஜூன் 18 ஈரோடு மாவட்டத்தில் கவுந்தப்பாடி யிலிருந்து  பெருந்துறை சிப்காட் செல்லும் 17 ஆம் எண் கொண்ட நகரப்பேருந்தில் பெருந்துறை சந்தைவரை செல்லும் பேருந்து என்பதை குறிக்கும்வகையில் அமைக்கப்பட்ட பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு இடமில்லை. ஆங்கிலத்திலும், அதனையடுத்து இந்தியிலும் பெயர்ப்பலகைஅமைக்கப் பட்டுள்ளது. அந்த பெயர்ப் பலகையில் தமிழில் எழுதப்பட வில்லை.

அறிவிக்கப்படாத இந்தித் திணிப்பை தமிழக அரசே செய்யத் துணிந்துவிட்டதா?

வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் குவிக்கப்பட்டு வருகின்றனர். தமிழர்களின் தொழில்வாழ்வாதாரம் மாநக ரங்களிலிருந்து சிற்றூர்வரை பறிபோகிறது.

தமிழ்நாட்டில் இயங்கிவரு கின்ற மத்திய அரசு அலுவல கங்களில்அலுவலகக்கோப்பு கள் இந்தியில் திணிக்கப்படும் நிலை தொடர்ந்து கொண்டிருக் கிறது.மத்தியஅரசுஅலுவ லகங்களில்இந்திமொழி கட்டாயம் என்று ஆக்கப்பட்டுள்ளது.

அவ்வப்போது எதிர்ப்புகள் ஏற்பட்ட போதிலும், நெடுஞ்சாலைகளில் மைல்கல்களில் உள்ள பெயர்களில் இந்தி நுழைக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு பணியிடங்களி லும் வெகுவாக வடமாநிலத்தவர் திணிக்கப்பட்டுவரும்நிலை குறிப்பாக ரயில்வே துறை, வங்கிகள் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் அனைத்துப் படிநிலைகளிலும் உள்ள அரசு ஊழியர்களாக வட மாநிலத்தவர் இருக்கின்றனர்.

மேலும், மத்திய அரசுத் துறைகளில்உயர்பதவிக்கான பணியிடங்களிலுள்ளதமிழர் களைவடமாநிலங்களுக்குக் கட்டாயபணியிடமாற்றம் செய்து,அவர்கள்பணி யிடங்களில் வடமாநிலத்தவ ரைத்திணிக்கின்றபோக்கு திட்டமிட்டு செயல்படுத்தப் படும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக பல துறை களிலும் மத்திய அரசு இந்தி மொழியைத் திணித்து வருகின்ற சூழலில், மாநில அரசின் கீழ் இயங்கும் போக்குவரத்துக் கழகநகரப்பேருந்தில் ஊர்ப் பெயர்ப்பலகையில் இந்தி திணிக்கப்பட்டுள்ளது அனைத்து தரப்பினரையும் பெரும் கொதிப்படையச் செய் துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner