எழுத்துரு அளவு Larger Font Smaller Font

து.அரிபரந்தாமன்,நீதிபதி (ஓய்வு)

சென்னை, ஜூன் 18 ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அரசு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை குடியரசுத் தலைவரின் முடிவு என்று சொல்லிவிட முடியாது. அது மோடி அரசின் முடிவுதான்.

மத்திய அமைச்சரவையின் முடிவையேஉள்துறைஅமைச் சகமானது குடியரசுத் தலைவ ருக்கு அனுப்புகிறது.அதையே குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிடுகிறது. இது சம்பந்தமாக நேரடியாக முடிவெடுக் கும் அதிகாரத்தைக் குடியரசுத்தலைவருக்குஅரச மைப்புச் சட்டம் வழங்க வில்லை. தமிழ்நாடு அரசுக்கு உண்மையில் எழுவரையும் விடுதலைசெய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அரசமைப்புச் சட்டம் பிரிவு 161 வழங்கும் இறையாண்மை அதிகாரத் தைப் பயன்படுத்தி விடுவிக்கலாம். 2.12.2015 இ-ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இதற்கு அடிப்படையாகிறது.

இதே நாட்டில்தான் காந்தி யார் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் 16 ஆண்டு சிறைவாசத்துக்குப் பின் 13.10.1964- இல் விடு விக்கப்பட்டனர். அப்போது மத்தியில் காங்கிரசு அரசு இருந்தது.

யார் ஆள்கிறார்களோ, அவர் களுடைய மனதையே முடிவுகள் வெளிப்படுத்துகின்றன!

இவ்வாறு சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன்தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner