எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கவுரி லங்கேசை "நாய்" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று!!

கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர்

பெங்களூரு ஜூன் 19 "நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும்?" என்று ஊடகவிய லாளர் சந்திப்பில் சிறீராம் சேனா என்ற இந்துத்வா அமைப்பின் தலை வர் பிரமோத் முத்தலிக் கேட்டுள்ளார்.

கருநாடக மாநிலம் பெங்களூருவில் வெளியாகும் லங்கேஷ் பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக இருந்தவர் கவுரி லங்கேஷ். பிரபல ஆங்கில நாளேடுகளில் பணியாற்றிய இவர், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தார். சமூக சிந்தனையாள ராகவும், எழுத்தாளராகவும், பகுத் தறிவுவாதி, மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளியாகவும் விளங்கிய கவுரி லங்கேஷ், வகுப்பு வாதம், மதவா தத்துக்கு எதிராக செயல்பட்டவர். மத்திய அரசை விமர்சித்தும், இந் துத்துவாவை எதிர்த்தும் தொடர்ந்து பல்வேறு கட்டுரைகளையும் எழுதி வந்தவர்.

கோரக்பூரில் நிகழ்ந்த குழந்தைகள் மரணம், குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்கள், இஷ்ரத் ஜஹான் விவகாரம் உள்ளிட்ட பல் வேறு விஷயங்கள் குறித்து எழுதிய இவர், பணமதிப்பிழப்பு, ரோஹிங்க்யா இனத்தவர்மீது நடத்தப்படும் அத்து மீறல்கள் உள்ளிட்டவை குறித்தும் பேசி வந்தார். இதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றுக்காக அவதூறு வழக்கும் இவர்மீது பாய்ந்ததுண்டு. அதனை பாஜக எம்பி பிரஹலாத் ஜோஷி தொடர்ந்துள்ளார். வலது சாரிகளை கடுமையாக அதே நேரத் தில் அறிவு ரீதியாக விமர்சித்த கவுரி லங்கேஷ், எதன் மீதும் விமர்சிக்கத் தயங்காத துணிச்சல் மிக்கவர்.

இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு வெளியே சென்று விட்டு காரில் தனது வீட்டுக்குத்  திரும்பினார். காரை வெளியே நிறுத்திவிட்டு வீட்டுக்குள் செல்வதற்காக வாயிற் கதவைத் திறக்க முயன்றார். அப் போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 4 பேர், துப்பாக்கியால் சரமாரியாக கவுரி லங்கேஷை சுட்டனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத் திலேயே பரிதாப மாக உயிரிழந்தார். (5.9.2017).

மூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப் பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பல்வேறு கண்டனக் குரல் களும் எழுந்தன. இது குறித்து காவல் துறையினர் வழக் குப் பதிவு செய்து சிலரைக் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு குறித்து சிறீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் கூறுகையில், "கடந்த காங்கிரசு ஆட்சியிலும் கொலைகள் நடந்துள்ளது. அக்கொலைகள் குறித்து அப்போது யாரும் கேள்வி கேட்கவில்லை. ஆனால் கவுரி லங்கேஷ் கொலையில் மோடி ஏன் மவுனம் காக்கிறார் என்று கேள்வி கேட்கின்றனர். கர்நாடகாவில் ஒரு நாய் இறந்தால் அதற்கு ஏன் மோடி பதில் கூற வேண்டும்?" என்று தெரிவித்துள்ளார். கவுரிலங்கேஷை துப்பாக்கியால் சுட்ட பரசுராம் மற்றும் ராம்சேனா தலைவர்  பிரமோத் முத்தலிக் இரு வரும் இணைந்து எடுத்துக்கொண்ட படம் குறித்து ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியாமல் அதைத் திசை திருப்பும் விதமாக இப்படிப் பேசியுள்ளார்.  இதற்கு முன்பு  தேர்தல் பிரச் சாரத்திற்கு முன்பு ஒரு ஊடகத்தில் நடந்த நேர்காணலில் (9.7.2013) மோடியிடம் குஜராத் கலவரம் பற்றி கேட்ட போது "காரில் செல்லும் போது கார்ச்சக்கரத்தில் நாய்குட்டி அடிபட்டு செத்துப் போய்விட்டால் அதற்காக கவலைப்பட்டுக் கொண்டு இருக்கமுடியுமா? சிறிது வருத்தம் இருக்கும். இருப்பினும் நாம் தொடர்ந்து போய்க் கொண்டுதான் இருப்போம்" என்று குஜராத் கலவரத்தில் இறந்த சிறுபான்மையினரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசி னார்.

இவர்தான் நரேந்திரமோடி என் பது நினைவிருக்கட்டும்.

இந்துத்துவா என்பது பாசிசத்தின் மறுபதிப்பு என்பதற்கு வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner