ஈரோடு மாவட்டம் பெருந்துறை கிளை தமிழ்நாடு அரசு போக்கு வரத்துத்துறைக்குச்சொந்தமான நகரப் பேருந்து - பெருந்துறையிலிருந்து கவுந்தப்பாடி செல்லும் 17/22 வழித்தடம் பேருந்துப் பெயர்ப்ப லகையில் இந்தியில் எழுதப்பட்டிருந்ததை சமூக ஊடகம் வழியாக அறிந்தவுடன் 18.06.2018 திங்கள் நண்பகல் 12 மணியளவில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில், மாநில இளை ஞரணி துணை செயலாளர் தே.காமராஜ்,மாவட்ட ப.க அமைப்பாளர் பி.என்.எம். பெரிய சாமி ஆகியோர் அரசுப் போக்குவரத்துத் துறை (வணிகம்) நிர்வாக அலுவலர் திரு.மோகன் அவர்களிடம் இந்தி பெயர்ப் பலகையை அகற்றக் கோரியும், வைத்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் விண்ணப்பம் கொடுக்கப்பட்டது.
நேற்றே (ஜூன் 17) அவர்களுக்கு விளக்கம் கேட்டு தாக்கீது கொடுத்ததாகவும், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இனிமேல் இதுபோன்று தவறுகள் நிகழாது என்றும் உறுதிபடக் கூறினார். 18.06.2018 மாலை அந்தப் பேருந்து நடத்துநர் இடை நீக்கம் செய்யப்பட்டதாக பெருந்துறை த.அ.போ கிளையில் இருந்து சக பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.