எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிவசேனா குற்றச்சாட்டு

மும்பை, ஜூன் 19- காஷ்மீரில் ராணுவ வீரர் அவுரங்க சீப், பத்திரிகையாளர் ஷூஜாத் புகாரி ஆகியோரின் மரணத்திற்கு மத்தியபாஜக அரசே முழுப்பொறுப்பு என்று, சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.

பிரதமர் எப்போதும் வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கிறார். பாதுகாப்பு அமைச்சருக்கோ கட்சிப் பணிகளே நிறைய உள்ளன. உள்துறை அமைச்சரும் உள்ளூரில் இருப்பதில்லை. பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களால் நாட்டின் மரியாதை உயர்வதாக பாஜக பெருமை அடித்துக்கொள்கிறது. காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக அய்க்கிய நாடுகள் அவையில் பெயரெடுத்ததுதான் பெருமையா? இது பிரதமருக்கு தலைக்குனிவு அல்லாமல் வேறென்ன என்றும் சிவசேனா கேட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner