எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கேள்வி: ஆளும் கட்சியின் ஆதரவும், உயர் அதிகார வர்க்கத்தின் துணையும் இருந்தால், காவல் துறையின் கைகள் கட்டப்பட்டு விடுகின்றன'' என்பது எஸ்.வி.சேகர் விவகாரத்தில் உண்மையாகி விட்டதே?

பதில்: கையில் ஆயுதம் எடுப்போ'',தனித் தமிழ் நாட்டை உருவாக்குவோ'', ஒசாமா பின்லேடன் வாழ்க'' என்றெல்லாம் கோஷம் போடுகிறவர்களைக் கண்டும் காணாமல் இருக்கிறது சட்டமும், போலீசும், நீதித்துறையும்.  எனவே தமிழகத்தில் யார் என்ன செய் தாலும் சட்டம் மவுனமாகத்தான் இருக்கும். ஆக, எல்லோருமே சட்டத்தை மீற நாமே வழி வகுத் திருக்கிறோம். ஒட்டுமொத்தமான இந்தச் சட்டக்குலை வில் எஸ்.வி.சேகர் விவகாரமும் ஒன்று. சட்டம் மவுன விரதம் அனுசரித்தும், இன்னும் தமிழகத்தில் அமைதி இருப்பதற்கு நமது பாரம்பரிய பண்புகளும், கலா சாரமும்தான் காரணம்.

'துக்ளக்' , 20.6.2018 - பக்கம் 10

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு என்ன விலை என்று சொன்னானாம். நீ ஏண்டா பரிட்சையில் பாசாகவில்லை எனக் கேட்டால் பக்கத்து வீட்டுப் பக்கிரி சாமியும் பெயிலாகி விட்டான் என்றானாம் ஒருவன் - அந்த ஏமாற்றுக்காரர்களுக்கும் துக்ளக்' கூட்டத்துக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் கிடையாது. மோடியை சமூக வலைதளங்களில் விமர்சித்ததாக உடனடியாக சிறீவில்லிபுத்தூரைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டுள்ளார். பா.ஜ.க.வினர் கொடுத்த புகாரின் பெயரில் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள் ளனர்.

தேனி மாவட்டம், வருசநாடு பகுதியைச் சேர்ந்த கர்ணன் என்பவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன் னீர்செல்வம் ஆகியோரை சமூக வலைதளத்தில் விமர்சித்ததாக கைது செய்யப்பட்டார்.

மே 31 ஆம் தேதி சமூக வலைதளத்தில் தமிழி சையை விமர்சனம் செய்த சூரியதேவி என்ற திருச்சியைச் சேர்ந்த பெண் ஜூன் 2 ஆம் தேதி சென் னையில் திருச்சி காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ஆனால், எஸ்.வி.சேகர் விடயத்தில் என்ன நடக்கிறது?  ஊடகங்களில் பணியாற்றும் ஒட்டுமொத்த பெண்களையும் இழிவுபடுத்தி எழுதிய எஸ்.வி.சேகர் ஏன் கைது செய்யப்படவில்லை? ஆரிய - பூணூல் பாசமாயிற்றே! போதும் போதாதற்கு தலைமைச் செய லாளரின் உபயம் வேறு!

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்தவனுக்கு மோட்சம் அளித்த கடவுளுக்குச் சொந்தக்காரர் களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா!

எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சந்தர்ப்பம் வரும்போது சரியான சூடு கொடுக்கத்தான் செய்வார்கள்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner