எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 21 இந்தியன் ரயில்வே துறையில் ரயில் பெட்டிகளின் நிறத்திலும் காவியைப் புகுத்துவதென மத்தியில் ஆளும் பாஜக அரசு முடிவெடுத்துள்ளது.

ரயில் பெட்டிகளின் உள்பகுதிகளில் கூடுதலான வசதிகள் செய்யப்படும். அனைத்து பெட்டிகளிலும் பையோ கழிப்பறைகள், செல்பேசி சார்ஜ் செய்யும் வசதி மற்றும் படுக்கை, இருக்கை அமைப்புகளுடன் இருக்கும்.

தற்பொழுது அடர் நீல நிறத்தில் உள்ள அனைத்து ரயில் பெட்டிகளும் அடர் மற்றும் வெளிர் காவி நிறத்தில் மாற்றப்பட உள்ளன. 16 பெட்டிகள் கொண்ட டில்லி பதன்கோட் விரைவு ரயில் அடர் மற்றும் வெளிர் காவிநிறங்களுடன் இந்த மாத இறுதியில் இயக்கப்பட உள்ளது. இதேபோல் வடக்கு ரயில்வே துறையால் 30 ஆயிரம் ரயில் பெட்டிகளும் காவி நிறத்தில் மாற்றப்பட உள்ளன.

ராஜதானி, சதாப்தி, தூரந்தோ போன்ற பிரீமியம் ரயில்கள் மற்றும் தேஜாஸ், கட்டிமான் போன்ற சிறப்பு ரயில்களில் இந்த நிற மாற்றம் செய்யப்பட மாட்டாது.

சென்னை அய்சிஎஃப்பில் தயாரிக்கப்பட்ட மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களின் பெட்டி களின் நிறம் அடர் மற்றும் வெளிர் காவி நிறத்தில் மாற்றம் செய்யப்படும்.

ரயில்வேத்துறை அமைச்சகத்தின் மூத்த அலுவலர் கூறியதாவது:

நீண்ட காலமாக கிடப்பில் இருந்த ரயில் பெட்டிகளின் புதிய நிறமாற்றம் ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோய லின் இறுதி அனுமதி பெற்ற பின்னர் செய்யப்படும் என்றார்.

அடர் நீலநிறமேற்றப்பட்ட ரயில் பெட்டிகள் இருபது ஆண்டுகளுக்குப்பிறகு தற்பொழுது காவி  நிறத்துக்கு(செங்கல்நிறம்) மாற்றப்படுகிறது.

ரயில்வேத் துறையின் உயர் அலுவலர் கூறுகையில், ரயில் பெட்டிகளில் உள்கட் டமைப்பு மற்றும் மாற்றங்கள் செய்வது தொடர்பாக பயணிகளிடம் கருத்து கேட் கப்பட்டு வருகிறது என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner