எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரசியலமைப்பை மாற்ற முயற்சிப்பவர்களை

மக்கள் அழித்து விடுவார்கள்

சங் பரிவாரங்களுக்கு சரத்பவார் எச்சரிக்கை

மும்பை, ஜூன் 22 நாட்டின் அரசியலமைப்பை மாற்ற முயற்சிப்பவர்களை மக்கள் அழித்து விடுவார்கள் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சங்-பரிவாரங்களை மறைமுகமாக சாடியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, அரசியலமைப்பில் சில மாற்றங்களை மேற் கொள்வதே பாஜகவின் நோக்கம் என்றுமத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே கூறியது சர்ச்சை ஆனது. அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புவலுக்கவே, நாடாளுமன்றத்தில் அவர் மன்னிப்பு தெரிவித்தார். ஹெக்டேவின் பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து என்று பாஜக அப்போது தப்பினாலும், அரசியலமைப்பை சீர்குலைக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.

இந்நிலையிலேயே, இந்திய அரசியலமைப்பில் எத்தகைய மாற்றத்தை மேற்கொண்டாலும், பொது மக்களிடம் இருந்து பாஜக அரசு கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று சரத் பவார் கூறியுள்ளார்.அரசியலமைப்பை மாற்ற வேண்டுமென்பது பாஜக-வின் கொள்கை என்பதால், இதுமாதிரியான பேச்சுகள் மூலமாக, அந்தக் கட்சி மக்களின் மனநிலையைச் சோதித்துப்பார்க்கிறது என்று தெரிவித்துள்ள சரத் பவார், மறுபுறத்தில் இந்திய அரசியலமைப்பைக் காப்பதற்கான எல்லா முயற்சிகளுக்கும் தேசியவாத காங்கிரசு தலைமை வகிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பை மாற்ற முயற் சிப்பவர்களை, மக்கள் அழித்துவிடுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

பத்திரிகையாளர் படுகொலை  தலையங்கத்துக்கான

இடத்தை வெறுமையாக விட்டு கறுப்பு கட்டம் கட்டி பத்திரிகைகள்  கண்டனப் பதிவு

சிறீநகர், ஜூன் 22  ஜம்மு - காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புகாரி படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, முன்னணி நாளிதழ்கள் பல, தலையங்கத்திற்கான இடத்தை வெறுமையாக விட்டு தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன.

ஜம்மு - காஷ்மீரிலிருந்து வெளிவரும் நாளிதழான ரைசிங் காஷ்மீர் இதழின் ஆசிரியர் ஷூஜாத் புகாரியும் (50), அவரதுபாதுகாப்பு அதி காரிகள் 2 பேரும் கடந்த ஜூன் 14 ஆம் தேதி பத்திரிகை அலுவலக வாயிலிலேயே கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் என்று கண்டனத்திற்கும் உள்ளானது.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரிலிருந்து வெளியாகும் பல்வேறு முன்னணி நாளிதழ்களும் பத்திரிகைகளும் புதன்கிழமையன்று தங்கள் பத்திரிகையில் தலையங்கத் துக்கான இடத்தை வெறுமையாக விட்டிருந்தன. காஷ்மீர் பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பு எடுத்த முடிவின் அடிப்படையில், இந்த தலையங்கப் போராட்டம் முன் னெடுக்கப்பட்டு உள்ளது. பத்திரிகையின் குரலாக விளங்குவது தலை யங்கம்தான்; அதனை வெறுமையாக விடுவதன் மூலம் எங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம் என்று கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சி ஒரு பயங்கரவாத இயக்கம்

மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா, ஜூன் 22 மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பேசிய மாநில தலைவர்  திலிப் கோஷ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பா.ஜ.க.வினரிடம் மோதல் போக்கை கடைப்பிடிக்கிறார்கள். நம்மை அச்சுறுத்துகிறார்கள், இவ்வாறான போக்கு களில் ஈடுபடும் அவர்கள் சிறைக்கு தான் செல்வார்கள் அல்லது என்கவுன்டரில் கொல் லப்படுவார்கள் என சர்ச்சையை உருவாக்கும் விதத்தில் பேசியிருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலடிகொடுக்கும் விதமாக கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி,  பா.ஜ.க.வினர் டில்லியில் அதிகாரத்தில் உள்ளனர் எனும் மமதையில் அக்கட்சியினர் திரிணாமுல் காங்கிரசுகாரர்களை என்கவுன்டர் செய்து  விடுவோம் என மிரட்டுகிறார்கள். தைரியம் இருந்தால் அவர்கள் எங்களை தொட்டுப் பார்க்கட்டும், பிறகு தானாக அவர்கள் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு கொண்டுசென்று வைக்கப்படுவார்கள். பா.ஜ.க.வினர், கிருத்தவர்கள், இசுலாமியர்கள் மற்றும் சீக்கியர்கள் இடையே மட்டும் சண்டையை தூண்டிவிட்டு ஆதாயம் அடையவில்லை. அவர்கள், இந்துக்களையும் உயர்சாதி மற்றும் கீழ்சாதி என பிளவுபடுத்தி மோதலை உருவாக்கு கிறார்கள். ஆகவே, நாங்கள் ஒன்றும் பாரதீய ஜனதாவை போன்று ஒரு பயங்கரவாத இயக்கம் கிடையாது என அவர் கடுமையாக விமர் சனம் செய்துள்ளார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் தொடரும் அராஜகம்

ம.பி. மாநிலத்திலும் குதிரையில் சென்ற

தாழ்த்தப்பட்ட மணமகன் மீது தாக்குதல்!

போபால், ஜூன் 22 சில நாட்களுக்கு முன்பு, பாஜக ஆளும் குஜ ராத்தில் தாழ்த்தப்பட்ட மணமகன் ஒருவர் மாப்பிள்ளை ஊர்வ லத்தின்போது, குதிரையிலிருந்து இறங்கிவிடப்பட்டு அவமானப் படுத்தப்பட்டார். இந்நிலையில், பாஜக ஆட்சியிலிருக்கும் மற்றொரு மாநிலமான, மத்தியப் பிரதேசத்திலும் மணப்பெண் வீட்டுக்கு குதிரையில் சென்ற தாழ்த்தப்பட்ட மணமகன், ஜாதி ஆதிக்க வெறியர்களால், வலுக் கட்டாயமாக கீழே இறக்கி விடப்பட்டு, தாக்கப்பட்டுள்ளார். வட மாநிலங்களில் திருமணத்தின் போது, மாப்பிள்ளை குதிரையில் அமர்ந்து மணப்பெண் வீட்டுக்கு ஊர்வலமாக செல்வது வழக்கமாக உள்ளது. அந்த அடிப்படையில், மத்தியப்பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டம் பதமால்கர் கிராமத்தில் அசோக் அகிர்வார், மணப்பெண் வீட்டுக்கு குதிரையில் ஊர்வலமாக சென்றுள்ளார்.

அப்போது அங்குள்ள தாகூர் பிரிவைச் சேர்ந்த சாதி ஆதிக்க வெறியர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் குதிரையில் ஊர்வலம் செல்லக்கூடாது என்று கூறி அவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டு தாக்கியதுடன் மணப்பெண் வீட்டுக்கு நடந்து செல்ல வைத்துள்ளனர். தங்கள் பிரிவைச் சேர்ந்த ஆண்களுடன் கைகோர்த்துக் கொண்ட ஜாதி ஆதிக்கப் பிரிவைச் சேர்ந்த பெண்களும், இந்த சம்பவத்தில் மணமகன் ஊர்வலத்தில் வந்த வர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.தற்போது மணமகனுக்கு இழைக்கப் பட்ட தீண்டாமைக் கொடுமை தொடர்பாக விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner