எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஜூன் 24 -காஷ்மீரில், மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்று, ஆட்சியைக் கவிழ்த்ததன் மூலம், மக்கள வைத் தேர்தலில் ஆதாயம் பெற பாஜக முயற்சிப்பதாக யஷ்வந்த் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார்.

காஷ்மீரின் சட்டம் - ஒழுங்கு பராமரிப்பைப் பொறுத்தவரை, மாநில அரசுக்கு எந்த அளவுக் குப் பங்கிருக்கிறதோ, அதே அளவுக்கு மத்திய அரசுக்கும் பங்குள்ளதால், பாஜக இவ் விஷயத்தில் தப்ப முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஜம்மு - காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும் பப் பெற்றுள்ளது. இதன் மூல மாக மதவாதமும் பிரிவினை வாதமும் தூண்டப்படும் என்ப தால், அதன் வழியாக பலன் பெறலாம் என்று பாஜக பார்க் கிறது.பாஜக - பிடிபி கூட்டணி தொடங்கிய நாளில் இருந்தே, இரு கட்சிகளும் நேரெதிர் திசை நோக்கி சென்று கொண் டிருந்தன. இரு கட்சிகளுக்கும் இடையே சிக்கி தற்போது ஆட்சி காயப்பட்டதுதான் மிச்சம். இப்போது கூட்டணி முறிந்துள்ளது.இந்தச் சூழலில் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முன்வராததால், அங்கு உடன டியாக சட்டமன்றம் கலைக்கப் பட்டுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால், ஜம்மு -காஷ்மீரைத் தேர்தல் ஆதாயத்துக்கான பகடைக் காயாக பாஜக பயன்படுத்திய தாகவே மக்கள் நினைப்பார்கள்.இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner