எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

டேராடூன், ஜூன் 24 உத்தரகண்ட் மாநிலம் டேராடூ னில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டார். டேராடூனில் வன ஆய்வு நிறுவனத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி, யோகாவில் உள்ள பல ஆசனங்களை மக் களோடு ஒன்றாக இணைந்து செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 55 ஆயிரம் பேர் பங்கேற்று ஒரே நேரத்தில் யோகா செய்தனர்.  அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருந்த 73 வயது பெண் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த ஆம்புலன்சில் மருத்துவ மனைக்குக் கொண்டு செல் லப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து டேராடூன் காவல் துறை கண்காணிப்பாளர் பிரதீப் ராய் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி பங் கேற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னெச்சரிக்கையாக ஆம்பு லன்ஸ், மருத்துவர்கள் தயாராக வைக்கப்பட்டு இருந்தனர். அந்தப் பெண் திடீரென மயங்கி விழுந்ததும் அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி வழங் கினர். முதலுதவியில் எந்தத் முன்னேற்றமும் இல்லாததால் உடனடியாக அவரை ஆம்பு லன்சில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கு அவருக்கு உரியச் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மருத்துவர்களின் அறிக்கைக்கு பின்புதான் அந் தப் பெண் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் எனக் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner