ப.சிதம்பரம்
சென்னை, ஜூன் 24 சென்னை தமிழ்நாடு மாணவர் காங்கிரசின் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (23.6.2018) நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ், எஸ்.சி, எஸ்டி பிரிவு மாநில தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் பேசும் போது கூறியதா வது:
இந்தியாவில் சாதி பாகுபாடு காணப்படு கிறது. அனைத்துக்கும் மூலமே மனுநீதி எனும் ஆர்.எஸ்.எஸ். கோட் பாடுதான். இந்த பாகு பாடு மறைய, சமுதாய கொடுமைகள் நீங்க மாணவர்கள் கல்வியில் மட்டுமன்றி அதிகாரத் திலும் அமரவேண்டும். அப்போது தான் தேசம் சிறப்பாகும். மனுநீதியை ஆர்எஸ்எஸ், பாஜக ஆத ரிக்கின்றன. ஆனால் மனு நீதியை காங்கிரஸ், திரா விட இயக்கங்கள் எதிர்க் கின்றன எனக் கூறினார்