எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இராமேசுவரம் கோவில் பற்றிய செய்தி இது.

கோவிலில் புனித தீர்த்தம் கேட்டால் ரூபாய் நூறு கேட் கிறார்கள்.

தீர்த்த குளியல்களுக்குத் தனியே கட்டணம் உண்டு.

ஆனால், பசை' உள்ள பக்தர்கள் வந்தால், கோவில் ஊழியர்கள் அவர்களிடம் கனமான பணத்தைப் பறித்து, தனியாக தீர்த்தமாட அழைத்துச் செல்கின்றனர்.

(இது தினமலரில்' வந்த செய்தி)

காற்றுக்கும் விலை வந்தது!

விளையாட்டாக சொன்னது வினையாகவே ஆகிவிட்டது. ஒரு ஆக்சிஜன் குடுவை விலை ரூ.635. வாட்டர் கேன் விலை கொடுத்து வாங்குவது மாதிரி - காற்றையும் விலை கொடுத்து வாங்கும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை ஜி.என்.செட்டி சாலையில் ஒரு நிறு வனம்ஆக்சிஜன்குடுவை விற் பனையைத் தொடங்கியுள்ளது.

யாரை சாடுகிறார்?

துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுகாரின் அருள்வாக்கு' இதோ:

சமீப காலமாக ஜாதி, மதம் ஆகியவை நாட்டு மக்களின் மனதில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஒற்றுமைதான் நம் நாட்டுக்குத் தேவை!'

பிரணாப் முகர்ஜியின் உபயம்!'

மேனாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். முகாமுக்குச் சென்று உரை நிகழ்த்திய பிறகு, ஆர்.எஸ்.எஸில் இணைய ஏராள விண்ணப்பங்கள் நாள்தோறும் வந்துகொண்டுள்ளன.

- விப்லப் ராய்,

ஆர்.எஸ்.எஸின் முக்கிய

பொறுப்பாளர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner