எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பஞ்சாயத்து தலைவர் வீட்டு முன்பு வாகனத்தில் சென்ற

தாழ்த்தப்பட்ட இளைஞர்மீது தாக்குதல்!

போபால், ஜூன் 26 -ஊராட்சித் தலைவர் வீட்டு முன்பு, பைக் ஓட்டி விட்டதாகக் கூறி, தாழ்த்தப்பட்ட இளைஞரைத் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், போபால் அருகே உள்ள பண் டெல்காந்த் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தயாராம் அகிர்வார் (30). தாழ்த்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்த இளைஞ ரான இவர், கடந்த சில நாள் களுக்கு முன்னதாக, அந்த கிராமத்தின் ஊராட்சித் தலைவர் ஹேந்த் குர்மிவீட்டின் முன்பு, இருசக்கர வாகனத்தில் சென்று விட்டாராம். இதற்காக, அவரின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வந்து வீட்டிற்குள் வைத்து ஹேந்த் குர்மியும் அவ ருடைய சகோதரர்களும் சேர்ந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். ஹேந்த் குர்மியின் சகோதரர் ஒருவர் துப்பாக்கியை வைத்து இனிமேல் இவ் வாறு வேகமாக ஓட்டினால் சுட்டுக் கொன்று விடுவேன் என்றும் தயாராமை மிரட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தயாராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அந்த புகாரைக்கூட காவல் துறையினர் வாங்க மறுத்துள்ளனர். ஆனால், தயாராம் அகிர்வார் தாக்கப்பட்ட கொடுமையை, யாரோ ஒருவர் வீடியோவில் எடுத்து பரவ விட்டதால், தற்போது வேறு வழியின்றி ஹேந்த் குர்மி மற்றும் அவரது சகோதரர்களான வினோத், முன்னு மற்றும் அனிருத்தா ஆகியோர் மீது எஸ்சி- எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner