எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கேரளாவைப்போல் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டத்தை செயல்படுத்துக!

புதுச்சேரி,ஜூன் 26 கேரளாவைப்போல் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டத்தை செயல்படுத்தவேண்டும்என்றும், சுயமரியாதையை இழிவுபடுத்தும் சடங்குகளுக்கு எதிராக தடைச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும் புதுச்சேரியில் ஞாயிறன்று நிறைவடைந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 14 ஆவது மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் வருமாறு:

அரசுப்பள்ளிகள்மற்றும்தனியார் பள்ளிகளில்மதம்சார்ந்தநிகழ்வுகள், மத அமைப்புகளின் நிகழ்ச்சிகள் நடத் தப்படுவதற்குத் தடைவிதிக்க வேண்டும். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மணவாளமா முனிகள் கோவிலில் பார்ப் பனர் அல் லாதார் தலைவாசலுக்கு வெளியே நிறுத்தப்படுவதும், தமிழ் திவ்யப்பிரபந்தம் பாட அனுமதி மறுக்கப்படுவதும்இன்ற ளவும் தொடர்கிறது. இதனை அறநிலையத் துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. கோவில் வாயிலில் இந்த அப்பட்டமான ஜாதியப் பாகுபாடு, தமிழ் புறக்கணிப்பு இரண்டையும் மாநாடு கண்டிக்கிறது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்டம் கொண்டு வந்து செயல்படுத்துகிற கேரள இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசும் இதைச் செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் மூடநம்பிக்கைகள், மனித சுயமரியாதையை இழிவுபடுத்தும் சடங்குகள் தடைச்சட்டம் கொண்டுவந்து சமூக சீர்திருத்த நட வடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். ஜாதி ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.  உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் ஏற்கப்படவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இந்தித் திணிப்பை ஏற்பதற்கில்லை. தமிழ்வழி கல்வி, வாய்ப்புகளை, ஏற்ற சூழலை அரசு உருவாக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner