எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிட இயக்கத்தின் சுயமரியாதையை இழந்துவிடக் கூடாது

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை, ஜூன் 27 தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த மண்ணில் மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்றார் தளபதி மு.க.ஸ்டாலின்.

காவல்துறை மானியக் கோரிக்கையின்மீது எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று (26.6.2018) பேசுகையில் குறிப்பிட்டதாவது:

இந்த மண்ணில் மதவெறி சக்திகளுக்கு நிச்சய மாக இடமில்லை. அது திமுக ஆட்சியாக இருந் தாலும் சரி, அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்த மண்ணில் நாம் மதச் சார்பற்ற சக்திகளை மட்டுமே ஊக்கப்படுத்தி இருக்கிறோம். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென சொன்னால், தி.மு.க. தலை வர் கலைஞர் அவர்களும், மறைந்த எம்.ஜி.ஆர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் அம்மையார் அவர்களும் அனைவருமே மதவெறி சக்திகளுக்கு தமிழகத்தில் ஒருபோதும் இடம் தந்ததே கிடையாது. அந்த சமூக நல்லிணக்கத்தையும், மத நல்லி ணக்கத்தையும் போற்றி வளர்த்த மண் இந்த தமிழ் நாட்டு மண். ஆனால், சமீப காலங்களில் மதவெறி பிடித்த சக்திகளுக்கு இடமளிக்கக் கூடிய வகையில் இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது என் பதை வருத்தத்தோடு பதிவு செய்ய விரும்புகிறேன்.

(துணை முதலமைச்சர் குறுக்கீடு)

(எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் பதில்)

(முதலமைச்சர் குறுக்கீடு)

சமூக நல்லிணக்கத்தையும், மத நல்லிணக்கை யும் போற்றி வளர்த்த மண் இந்த தமிழ்நாட்டு மண். ஆனால், திராவிட இயக்கம் கட்டிக் காத்த மதச் சார்பற்றத்தன்மை மத நல்லிணக்கம் சென்று விட் டால் அது நிச்சயம் திரும்ப வராது அது இந்த மண் ணிற்கு நாம் செய்யக்கூடிய துரோகமாக அமைந்து விடும்.

திராவிட முன்னேற்றக் கழகம், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தி.மு.க. தலைவர் கலைஞர் வழிநின்று இந்த மண்ணின் பெருமையை நிலைநாட்ட பாடுபடும் என்பதை இந்த அவையிலே சூளுரைக்கின்ற அதே நேரத்தில், எக்காரணம் கொண்டும் நாம் திராவிட இயக்கத்தின் சுயமரி யாதையை, தன்மானத்தை இழந்துவிடக் கூடாது.

- இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner