எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் நகரங்கள்தான் அதிகம்!

புதுடில்லி, ஜூன் 30- இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத 10 நகரங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இதில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் நகரங்கள்தான் அதிகம் உள்ளன.

தேசியக் குற்றப்பதிவு ஆவணத் தரவுகளின் அடிப்படையிலான இந்த பட்டியலில், தென்மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நகரம் கூட இடம் பெறவில்லை. அத்தனையும் வடமாநில நகரங்களைச் சேர்ந்தவை.

இன்னும் குறிப்பாக சொன்னால், பாஜக ஆளும் மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் நகரங்கள்தான் இடம்பெற்றுள்ளன. மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில்தான் பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் பதிவாகியுள்ளன. மொத்தக் குற்றங்களில் 26.03 சதவிகிதம் பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் ஆகும். பெண்கள் மீதான வன்முறை தொடர்பான குற்றங்கள் 41.08 சதவிகிதம். சத்தீஸ்கர் மாநிலம் துர்க் பிலாய் நகரில், 16.07 சதவிகித பாலியல் வல்லுறவுக் குற்றங்களும், 36.07 சதவிகித பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் பதிவாகியுள்ளன.

இதே மாநிலத்தைச் சேர்ந்த ராய்ப்பூர் நகரத்தில் 19.04 சதவிகித வல்லுறவுக் குற்றங்களும், பெண்கள் மீதான வன்முறை தொடர்பாக 17 சதவிகித குற்றங்களும் பதிவாகியுள்ளன. யுனெஸ்கோவால் பாரம் பரிய நகரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநிலம் அவுரங்கா பாத்திலும் கூட, 15.08 சதவிகித பாலியல்குற்றங்களும், 82.06 சதவிகிதம் பெண்கள் மீதான வன்முறை குற்றங்களும் பதிவாகியுள்ளன.

டில்லியில் 18.02 சதவிகித பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் நடந்துள்ளன. பெண்களுக்கு எதிரான தாக்குதல் மட்டும் 77.02 சதவிகிதம். இதேபோல, அரி யானா மாநிலம் பரிதாபத், மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர், ஜபல்பூர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜோத்பூர், கோடா ஆகிய நகரங்களும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்களாக பட்டியலிடப்பட்டு உள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner