எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பதவி விலகிய அரவிந்த் சுப்பிரமணியன் ஆலோசனை!

புதுடில்லி, ஜூன் 30 -சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறையை எளிதாக்க 28 சதவிகித வரி வரம்பு நீக்கப்பட வேண்டும் என்று, அண்மை யில் தனது பொருளாதார ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் சுப்பிரமணியன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

தனது கருத்துகளை இந்தி யன் எக்ஸ்பிரஸ் ஏட்டிற்காக பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என்னைப் பொறுத்தவரை யில் முறையான ஜிஎஸ்டி கட் டமைப்புக்கு 28 சதவிகித வரி வரம்பை நீக்கிவிட்டால் சரியாக இருக்கும். ஆனால், செஸ் வரிகள் இருந்தாக வேண்டும். ஏனெனில் சில பொருட்களுக்குக் கூடுதல் கட்டணம் விதிக்க வேண்டியுள்ளது. நான் தாக்கல் செய்திருந்த அறிக்கை ஒன்றில் 18 சதவிகிதம் மற்றும் 40 சதவிகிதம் வரி வரம்புகள் இருக்கவேண்டும் என்று பரிந் துரை செய்திருந்தேன். அந்த 40 சதவிகித வரி வரம்பை செஸ் வரிகள் ஈடு செய்யும்.இப்போது ஜிஎஸ்டி-யில் 0 சதவிகிதம், 5 சதவிகிதம், 12 சதவிகி தம், 18 சதவிகிதம் மற்றும் 28 சதவிகிதம் ஆகிய அய்ந்து அடுக்கு வரிமுறை உள்ளது. மேலும், தங்கத் துக்கு 3 சதவிகித செஸ் வரியும், வைரத்துக்கு 0.25 சதவிகித செஸ் வரியும் விதிக்கப்படுகிறது. 28 சதவிகித வரி வரம்புக்குள் வரும் ஆடம் பரப் பொருட்களுக்கு ஒரு சத விகிதம் முதல் 15 சதவிகிதம் வரையில் கூடுதல் செஸ் வரி விதிக்கப்படுகிறது. எனவே, ஜிஎஸ்டி அமைப்பில் சீர்திருத்தம் செய்யவேண்டுமானால் 28 சதவிகித வரி வரம்பைத்தான் நீக்கவேண்டும்.

இவ்வாறு அரவிந்த் சுப்பிர மணியன் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner